பக்கம் எண் :

கற்பியல்250கலைஞர் உரை

1246.

கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்

பொய்க்காய்வு காய்தியென் நெஞ்சு.

 

நெஞ்சே!   கூடிக்   கலந்து ஊடலை நீக்கும் காதலரைக் கண்டால் ஒரு
தடவைகூடப்    பிணங்கியறியாத   நீ  இப்போது அவர் மீது கொள்ளுகிற
கோபம் பொய்யானது தானே?
 

1247.

காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சே

யானோ பொறேனிவ் விரண்டு.

 

நல்ல   நெஞ்சமே! ஒன்று காதலால் துடிப்பதையாவது   விட்டு   விடு;
அல்லது      அதனைத்    துணிந்து   சொல்ல   முடியாமல்   தடுக்கும்
நாணத்தையாவது   விட்டு  விடு.   இந்த  இரண்டு  செயல்களையும் ஒரே
நேரத்தில் தாங்கிக் கொள்ள என்னால் முடியாது.
 

1248.

பரிந்தவர் நல்காரென் றேங்கிப் பிரிந்தவர்

பின்செல்வாய் பேதையென் நெஞ்சு.

 

நம்மீது இரக்கமின்றிப்  பிரிந்து  விட்டாரேயென்று   ஏங்கிடும்  அதே
வேளையில்  பிரிந்தவர்  பின்னாலேயே  சென்று   கொண்டிருக்கும்  என்
நெஞ்சம் ஓர் அறிவற்ற பேதை போன்றதாகும்.
 

1249.

உள்ளத்தார் காத லவராக உள்ளிநீ

யாருழைச் சேறியென் நெஞ்சு.

 

உள்ளத்திலேயே   காதலர்  குடி  கொண்டிருக்கும்போது, நெஞ்சமே! நீ
அவரை நினைத்து வெளியே எவரிடம் தேடி அலைகிறாய்?
 

1250.

துன்னாத் துறந்தாரை நெஞ்சத் துடையேமா

இன்னும் இழத்தும் கவின்.

 

சேராமல் பிரிந்து சென்ற காதலரைச்  சிந்தையில்     வைத்திருப்பதால்
மேலும் மேனியெழில் இழந்து மெலிந்து அழிய வேண்டியுள்ளது.