1256. | செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ |
| எற்றென்னை உற்ற துயர். |
|
வெறுத்துப் பிரிந்ததையும் பொறுத்துக் கொண்டு அவர் பின்னே செல்லும் நிலையை என் நெஞ்சுக்கு ஏற்படுத்திய காதல் நோயின் தன்மைதான் என்னே. |
1257. | நாணென ஒன்றோ அறியலம் காமத்தால் |
| பேணியார் பெட்ப செயின். |
|
நமது அன்புக்குரியவர் நம்மீது கொண்ட காதலால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்யும்போது, நாணம் எனும் ஒரு பண்பு இருப்பதையே நாம் அறிவதில்லை. |
1258. | பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம் |
| பெண்மை உடைக்கும் படை. |
|
நம்முடைய பெண்மை எனும் உறுதியை உடைக்கும் படைக்கலனாக இருப்பது, பல மாயங்களில் வல்ல கள்வராம் காதலரின் பணிவான பாகுமொழியன்றோ? |
1259. | புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம் |
| கலத்தல் உறுவது கண்டு. |
|
ஊடல் கொண்டு பிணங்குவோம் என நினைத்துதான் சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னை விடுத்து அவருடன் கூடுவதைக் கண்டு என் பிடிவாதத்தை மறந்து தழுவிக் கொண்டேன். |
1260. | நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க் குண்டோ |
| புணர்ந்தூடி நிற்பேம் எனல். |
|
நெருப்பிலிட்ட கொழுப்பைப் போல் உருகிடும் நெஞ்சம் உடையவர்கள், கூடிக் களித்தபின் ஊடல் கொண்டு அதில் உறுதியாக இருக்க முடியுமா?. |