132. புலவி நுணுக்கம் |
1311. | பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர் |
| நண்ணேன் பரத்தநின் மார்பு. |
|
பெண்ணாக இருப்போர் எல்லோருமே, பொதுவாக நினைத்துக் கண்களால் உண்பதால் கற்பு நெறிகெட்ட உன் பரந்த மார்பைப் பாவை நான் தழுவ மாட்டேன். |
1312. | ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை |
| நீடுவாழ் கென்பாக் கறிந்து. |
|
ஊடல் கொண்டிருந்தபோது அவர் தும்மினார்; ஊடலை விடுத்து அவரை "நீடுவாழ்க" என வாழ்த்துவேன் என்று நினைத்து. |
1313. | கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் |
| காட்டிய சூடினீர் என்று. |
|
கிளையில் மலர்ந்த பூக்களைக் கட்டி நான் அணிந்து கொண்டிருந்தாலும், வேறொருத்திக்குக் காட்டுவதற்காகவே அணிந்திருக்கிறீர் எனக்கூறி சினம் கொள்வாள். |
1314. | யாரினுங் காதலம் என்றேனா ஊடினாள் |
| யாரினும் யாரினும் என்று. |
|
"யாரைக் காட்டிலும் உன்னிடம் நான் காதல் மிகுதியாகக் கொண்டுள்ளேன்" என்று இயல்பாகச் சொன்னதைக் கூடக் காதலி தவறாக எடுத்துக்கொண்டு "யாரைக்காட்டிலும் யாரைக் காட்டிலும்" எனக்கேட்டு ஊடல் புரியத் தொடங்கி விட்டாள். |
1315. | இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் |
| கண்நிறை நீர்கொண் டனள். |
|
"இப்பிறப்பில் யாம் பிரியமாட்டோம்" என்று நான் சொன்னவுடன் "அப்படியானால் மறு பிறப்பு என ஒன்று உண்டோ? அப்போது நம்மிடையே பிரிவு ஏற்படுமெனக் கூறுகிறாயா?" எனக் கேட்டுக் கண்கலங்கினாள் காதலி. |