பக்கம் எண் :

கற்பியல்264கலைஞர் உரை

1316.

உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்

புல்லாள் புலத்தக் கனள்.

 

"உன்னை நினைத்தேன்" என்று காதலியிடம் சொன்னதுதான்  தாமதம்."
"அப்படியானால்   நீர்   என்னை   மறந்திருந்தால்தானே  நினைத்திருக்க
முடியும்?" எனக்கேட்டு "ஏன் மறந்தீர்?" என்று அவள் ஊடல் கொண்டாள்.
 

1317.

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்

யாருள்ளித் தும்மினீர் என்று.

 

தும்மினேன்; வழக்கப்படி அவள்   என்னை   வாழ்த்தினாள்.  உடனே
என்ன சந்தேகமோ "யார் உம்மை நினைத்ததால் தும்மினீர்" என்று கேட்டு,
முதலில் அளித்த வாழ்த்துக்கு மாறாக அழத் தொடங்கிவிட்டாள்.
 

1318.

தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல்

எம்மை மறைத்திரோ என்று.

 

ஊடல்    கொள்வாளோ  எனப்     பயந்து நான் தும்மலை அடக்கிக்
கொள்வதைப்   பார்த்த    அவள் "ஓ" உமக்கு  நெருங்கியவர்   உம்மை
நினைப்பதை நான் அறியாதபடி மறைக்கிறீரோ?" எனக் கேட்டு அழுதாள்.
 

1319.

தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்

இந்நீரர் ஆகுதிர் என்று.

 

நான் பணிந்து போய் அவள் ஊடலை  நீக்கி  மகிழ்வித்தாலும், உடனே
அவள் "ஓ! நீர் இப்படித்தான் மற்ற பெண்களிடமும் நடந்து கொள்வீரோ?"
என்று சினந்தெழுவாள்.
 

1320.

நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்

யாருள்ளி நோக்கினீர் என்று.

 

ஒப்பற்ற    அவளுடைய    அழகை  நினைத்து  அவளையே  இமை
கொட்டாமல் பார்த்துக்   கொண்டிருந்தாலும், யாருடன் என்னை  ஒப்பிட்டு
உற்றுப் பார்க்கிறீர் என்று கோபம் கொள்வாள்.