பக்கம் எண் :

3

பேராசிரியரின் அணிந்துரை
 

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் எனத்தெளிந்து

உள்ளத்தில் ஊறிடும் எண்ணமெலாம் ஆய்ந்தே

தள்ளத்தகுவது மதவழிக் கற்பனையென ஓர்ந்து

கொள்ளத்தகுவது ஒப்புரவு நெறியென்றார் வள்ளுவர்!
 

சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான் எனினும்

பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் எனச்சாற்றி,

பிறவிவழியாம் வருணத்துக் கொருநீதி புகன்றிடும்

அறக்கேடாம் மநுவாதிசூது மறுத்திட்டார் வள்ளுவர்!
 

சிறப்புடன் செல்வமீனும் அறத்தினூங்கு ஆக்கமில்லை

மறத்தலின் கேடில்லை; மாசற்றமனச் சான்றூறும்

திறத்தினாவது இன்பம்; அழுக்காறு அவாவெகுளி

புறத்ததா, இன்னாச்சொல் தவிர்தலே அறமெனவும்;

தீதற்ற பொருளாக்கம் முயற்சியின் பயனெனவும்,

கோதற்ற காதலின்பம் உற்றதுணையின் உறவெனவும்

சூதற்ற அகத்துறவு ஐம்புலனடக்க விளைவெனவும்

ஏதமிலாப் பெருவாழ்வின் நெறிகண்டார் வள்ளுவர்!
 

இறை, தெய்வம் கடவுளெனப் போற்றிடுவார்,

நிறைகுணப் பேறெய்தும் 'தொழல்' எதுவெனவும்,

மறுபிறவி, ஆன்மா, துறக்கமென நம்பிடுவார்

உறுபிறவிப் புகழெய்தும் 'நெறி' எதுவெனவும்,

உற்றபிறப்பே 'கருமவினை' தலைவிதியென நம்புவார்

உற்றிடுமியற்கைச் சூழலின் விளைவே 'ஊழ்' எனவும்

உணர்வுடையார் உளமருள் நீங்கியே தெருளுமாறு

உலகவர் வாழ்வுக்கு உறுதுணையாவது முப்பால்!

வான்றோய் முகில்பொழி தூநீர் அனையதாய்