7. மக்கட்பேறு |
61. | பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த |
| மக்கட்பே றல்ல பிற. |
|
அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு எதுவுமில்லை. |
62. | எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் |
| பண்புடை மக்கட் பெறின். |
|
பெற்றெடுக்கும் மக்கள் பழிபடராத பண்புடையவர்களாக இருப்பின், ஏழேழு தலைமுறை எனும் அளவுக்குக் காலமெல்லாம் எந்தத் தீமையும் தீண்டாது. |
63. | தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் |
| தந்தம் வினையான் வரும். |
|
தம் பொருள் என்பது தம்மக்களையேயாம். அம்மக்களின் பொருள்கள் அவரவர் செயல்களின் விளைவாக வரக் கூடியவை. |
64. | அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் |
| சிறுகை அளாவிய கூழ். |
|
சிறந்த பொருளை அமிழ்தம் எனக் குறிப்பிட்டாலுங் கூடத் தம்முடைய குழந்தைகளின் பிஞ்சுக்கரத்தால் அளாவப்பட்ட கூழ் அந்த அமிழ்தத்தைவிடச் சுவையான தாகிவிடுகிறது. |
65. | மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர் |
| சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. |
|
தம் குழந்தைகளைத் தழுவி மகிழ்வது உடலுக்கு இன்பத்தையும், அந்தக் குழந்தைகளின் மழலை மொழி கேட்பது செவிக்கு இன்பத்தையும் வழங்கும். |