86. | செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான் |
| நல்விருந்து வானத் தவர்க்கு. |
|
வந்த விருந்தினரை உபசரித்து அவர்களை வழியனுப்பி வைக்கும்போதே, மேலும் வரக்கூடிய விருந்தினரை ஆவலுடன் எதிர்நோக்கி நிற்பவனை, புகழ்வானில் இருப்போர் நல்ல விருந்தினன் என்று வரவேற்றுப் போற்றுவர். |
87. | இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் |
| துணைத்துணை வேள்விப் பயன். |
|
விருந்தினராக வந்தவரின் சிறப்பை எண்ணிப்பார்த்து விருந்தோம்பலை ஒரு வேள்வியாகவே கருதலாம். |
88. | பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி |
| வேள்வி தலைப்படா தார். |
|
செல்வத்தைச் சேர்த்துவைத்து அதனை இழக்கும்போது, விருந்தோம்பல் எனும் வேள்விக்கு அது பயன்படுத்தப்படாமற் போயிற்றே என வருந்துவார்கள். |
89. | உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா |
| மடமை மடவார்கண் உண்டு. |
|
விருந்தினரை வரவேற்றுப் போற்றத் தெரியாத அறிவற்றவர்கள் எவ்வளவு பணம் படைத்தவர்களாக இருந்தாலும் தரித்திரம் பிடித்தவர்களாகவே கருதப்படுவார்கள். |
90. | மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து |
| நோக்கக் குழையும் விருந்து. |
|
அனிச்சம் எனப்படும் பூ, முகர்ந்தவுடன் வாடி விடக் கூடியது.அதுபோல் சற்று முகங்கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடிவிடுவர். |