10. இனியவை கூறல் |
91. | இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம் |
| செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். |
|
ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும். |
92. | அகன்அமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்து |
| இன்சொலன் ஆகப் பெறின். |
|
முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, அகம் குளிர்ந்து ஒன்றைக் கொடுப்பதை விட மேலான பண்பாகும்.
|
93. | முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம் |
| இன்சொ லினதே அறம். |
|
முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும். |
94. | துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் |
| இன்புறூஉம் இன்சொ லவர்க்கு. |
|
இன்சொல் பேசி எல்லோரிடத்திலும் கனிவுடன் பழகுவோர்க்கு 'நட்பில் வறுமை' எனும் துன்பமில்லை. |
95. | பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு |
| அணியல்ல மற்றுப் பிற |
|
அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது. |