126. | ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் |
| எழுமையும் ஏமாப் புடைத்து. |
|
உறுப்புகளை ஓர் ஓட்டுக்குள் அடக்கிக் கொள்ளும் ஆமையைப் போல் ஐம்பொறிகளையும் அடக்கியாளும் உறுதி, காலமெல்லாம் வாழ்க்கைக்குக் காவல் அரணாக அமையும். |
127. | யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற் |
| சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. |
|
ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும். இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகிவிடும். |
128. | ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் |
| நன்றாகா தாகி விடும். |
|
ஒரு குடம் பாலில் துளி நஞ்சுபோல், பேசும் சொற்களில் ஒரு சொல் தீய சொல்லாக இருந்து துன்பம் விளைவிக்குமானாலும், அந்தப் பேச்சில் உள்ள நல்ல சொற்கள் அனைத்தும் தீயவாகிவிடும். |
129. | தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே |
| நாவினாற் சுட்ட வடு. |
|
நெருப்பு சுட்ட புண்கூட ஆறி விடும்; ஆனால் வெறுப்புக் கொண்டு திட்டிய சொற்கள் விளைத்த துன்பம் ஆறவே ஆறாது. |
130. | கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி |
| அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. |
|
கற்பவை கற்றுச், சினம் காத்து, அடக்கமெனும் பண்பு கொண்டவரை அடைந்திட அறமானது வழிபார்த்துக் காத்திருக்கும். |