14. ஒழுக்கம் உடைமை |
131. | ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் |
| உயிரினும் ஓம்பப் படும். |
|
ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது. |
132. | பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கந் தெரிந்தோம்பித் |
| தேரினும் அஃதே துணை. |
|
எந்தெந்த வழிகளில் ஆராய்ந்தாலும் வாழ்க்கையில் ஒழுக்கமே சிறந்த துணை என்பதால், எத்தகைய துன்பத்தை ஏற்றாவது அதைக் காக்க வேண்டும். |
133. | ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம் |
| இழிந்த பிறப்பாய் விடும். |
|
ஒழுக்கம் உடையவராக வாழ்வதுதான் உயர்ந்த குடிப்பிறப்புக்கு எடுத்துக் காட்டாகும். ஒழுக்கம் தவறுகிறவர்கள் யாவராயினும் அவர்கள் இழிந்த குடியில் பிறந்தவர்களாகவே கருதப்படுவர். |
134. | மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் |
| பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். |
|
பார்ப்பனன் ஒருவன் கற்றதை மறந்துவிட்டால் மீண்டும் படித்துக் கொள்ள முடியும்; ஆனால், பிறப்புக்குச் சிறப்புச் சேர்க்கும் ஒழுக்கத்திலிருந்து அவன் தவறினால் இழிமகனே ஆவான். |
135. | அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை |
| ஒழுக்க மிலான்கண் உயர்வு. |
|
பொறாமையுடையவனுக்கும், நல்லொழுக்கமில்லாதவனுக்கும் அமையும் வாழ்வு, உயர்வான வாழ்வாகக் கருதப்பட மாட்டாது. |