146. | பகைபாவம் அச்சம் பழியென நான்கும் |
| இகவாவாம் இல்லிறப்பான் கண். |
|
பிறன் மனைவியிடம் முறைகேடாக நடக்க நினைப்பவனிடமிருந்து பகை, தீமை, அச்சம், பழி ஆகிய நான்கும் நீங்குவதில்லை. |
147. | அறனியலான் இல்வாழ்வா னென்பான் பிறனியலாள் |
| பெண்மை நயவா தவன். |
|
பிறன் மனைவியிடம் பெண்மை இன்பத்தை நாடிச் செல்லாதவனே அறவழியில் இல்வாழ்க்கை மேற்கொண்டவன் எனப்படுவான். |
148. | பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க் |
| கறனொன்றோ ஆன்ற வொழுக்கு. |
|
வேறொருவன் மனைவியைக் காம எண்ணத்துடன் நோக்காத பெருங்குணம் அறநெறி மட்டுமன்று; அது ஒழுக்கத்தின் சிகரமும் ஆகும். |
149. | நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின் |
| பிறற்குரியாள் தோள்தோயா தார். |
|
பிறன் மனைவியின் தோளைத் தீண்டாதவரே கடல் சூழ் இவ்வுலகின் பெருமைகளை அடைவதற்குத் தகுதியுடையவர். |
150. | அறன்வரையா னல்ல செயினும் பிறன்வரையாள் |
| பெண்மை நயவாமை நன்று. |
|
பிறன் மனைவியை விரும்பிச் செயல்படுவது அறவழியில் நடக்காதவர் செயலைவிடத் தீமையானதாகும். |