16. பொறையுடைமை |
151. | அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை |
| இகழ்வார்ப் பொறுத்தல் தலை. |
|
தன்மீது குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமியைப் போல் தம்மை இகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும். |
152. | பொறுத்த லிறப்பினை யென்றும் அதனை |
| மறத்த லதனினும் நன்று. |
|
அளவுகடந்து செய்யப்பட்ட தீங்கைப் பொறுத்துக் கொள்வதைக் காட்டிலும், அந்தத் தீங்கை அறவே மறந்து விடுவதே சிறந்த பண்பாகும். |
153. | இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள் |
| வன்மை மடவார்ப் பொறை. |
|
வறுமையிலும் கொடிய வறுமை; வந்த விருந்தினரை வரவேற்க முடியாதது. அதைப்போல வலிமையிலேயே பெரிய வலிமை அறிவிலிகளின் செயலைப் பொறுத்துக் கொள்வது. |
154. | நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை |
| போற்றி யொழுகப் படும். |
|
பொறுமையின் உறைவிடமாக இருப்பவரைத்தான் நிறைவான மனிதர் என்று உலகம் புகழும். |
155. | ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர் |
| பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து. |
|
தமக்கு இழைக்கப்படும் தீமையைப் பொறுத்துக் கொள்பவர்களை உலகத்தார் பொன்னாக மதித்துப் போற்றுவார்கள். பொறுத்துக் கொள்ளாமல் தண்டிப்பவர்களை அதற்கு ஒப்பாகக் கருத மாட்டார்கள். |