பக்கம் எண் :

6

தொண்டால், தியாகத்தால், திறமையால், பெற்ற

தகுதியால், தமிழினத்தின் தலைவரான கலைஞர்

தமிழர் வாழ்வை மயக்கிடு 'மாயை' அகன்றிட

உய்வு நெறியாம் குறளறம் விளங்கிடத்

தன்மதிநுட்பத் திறன்காட்டும் உரைதந்தார் இன்று

அதனதிநுட்பம் காட்டலும் எளிதன்றே எமக்கு!
 

தேனிறால் திருக்குறள் எனிலோ

அதன் பிழிவே இவ்வுரை என்பேன்;

தித்திக்கும் தேன்சுவையே யன்றி

மருத்துவப் பயனும் இவ்வுரைச் சிறப்பாம்!

பயில்தற்கும் தெளிதற்கும் எளிதாகும் இவ்வேடு,

துயில்நீங்கி எழும் தமிழர்க்கோர் கைவிளக்கு!

இளைய தலைமுறையினர் தமக்கோ வாழ்வினில்

இருளகற்றி வழிகாட்டும் திருவிளக்கு!
 

க. அன்பழகன்