246. | பொருள்நீங்கிப் பொச்சாந்தா ரென்பர் அருள்நீங்கி |
| அல்லவை செய்தொழுகு வார். |
|
அருளற்றவர்களாய்த் தீமைகளைச் செய்து வாழ்பவர்கள், பொருளற்றவர்களாகவும், கடமை மறந்தவர்களாகவும் ஆவர். |
247. | அருளில்லார்க் கவ்வுலகம் இல்லை பொருளில்லார்க் |
| கிவ்வுலகம் இல்லாகி யாங்கு. |
|
பொருள் இல்லாதவர்களுக்கு இல்லற வாழ்க்கை சிறப்பாக இராது. அதுபோலவே கருணை உள்ளம் இல்லாதவர்களின் துறவற வாழ்க்கையும் சிறப்பாக அமையாது. |
248. | பொருளற்றார் பூப்ப ரொருகால் அருளற்றார் |
| அற்றார்மற் றாதல் அரிது. |
|
பொருளை இழந்தவர் அதனை மீண்டும் தேடிப் பெறலாம். அருளை இழந்தால் இழந்ததுதான்; மீண்டும் பெற இயலாது. |
249. | தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் |
| அருளாதான் செய்யும் அறம். |
|
அறிவுத் தெளிவு இல்லாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டறிய முடியுமா? அது போலத்தான் அருள் இல்லாதவன் செய்யும் அறச்செயலும் இருக்கும். |
250. | வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் |
| மெலியார்மேற் செல்லு மிடத்து. |
|
தன்னைவிட மெலிந்தவர்களைத் துன்புறுத்த நினைக்கும் போது, தன்னைவிட வலியவர் முன்னால் அஞ்சி நிற்கும் நிலைமை தனக்கு இருப்பதை மறந்துவிடக் கூடாது. |