பக்கம் எண் :

8

அவ்வாறே, உலக வாழ்வு செம்மையாக நடைபெற இன்றியமையாததாகிய
ஒழுகலாறு அஃதாவது ஒழுக்கம், அதனையொட்டிய நெறிமுறைகள் ஆகியன
தேவை.  இன்று   உலகின்   ஒழுகலாறு   அஃதாவது  உலக நடைமுறை
கடைமுறையாகிக்  குடைசாய்  முறையாகவும் ஆகிக்கொண்டிருப்பதை நாம்
பலரும் அறிந்து, கண்  கலங்குவோரும் கை பிசைவோரும் படபடப்போரும்
துடிதுடிப்போருமாக உள்ளோம். உலகில் அறம் இல்லாமையாலோ, ஒழுக்கம்
பிறக்காமையாலோ, அஃது அழிந்துவிட்டதாலோ இந்நிலை  ஏற்படவில்லை.
ஒழுக்க   நெறிமுறை   அல்லது  அறநெறி  பலருக்கும்  அறியக்கூடியதாக
ஆக்கப்படாமையும் இதற்குக் காரணமாக உள்ளது.
 

அறம்  உரைக்க  முயன்ற பற்பலரும் அவ்வறத்தை நேராக உரைத்தால்
மக்கள் பின்பற்ற மாட்டார்கள் என்று கருதியதாலோ, அறத்தின் வாயிலாகத்
தாம் விரும்பும்  வேறு சில  கொள்கைகளைப் பரப்ப  வேண்டும்  என்னும்
வேட்கையாலோ   மக்கள்    வாழ்வுக்கு  அருமருந்தாகிய அறத்தை மதம்,
கடவுள்,   புராணக்கதை   போன்ற பலவற்றுடன் குழைத்துக் கொடுத்தனர்.
அது, மருந்தைவிட அதற்குத்  துணையாக  அதனுடன்  கலந்து  தரப்பட்ட
எண்ணெய் முதலியவற்றின் வலிமிகுதியால் மருந்தின் பயன்  கிட்டாததோடு
கலப்படமாகிய எண்ணெய் முதலியவற்றின் கேடுகளே  மீதூர்ந்து  அடர்த்து
மன்பதையைச் சீர்குலைத்துவிட்டதைக் காண்கிறோம். ஆகவே, பிறர் பலரும்
அறம் உரைப்பதற்கு மேற்கொண்ட   முறைகள்  பயன்விளைக்காமையோடு
கேடு பலவும் சூழ்ந்தன என்பதையும் காண்கிறோம்.
 

பொருளை  எல்லார்க்கும்  கிட்டும்படி   செய்வது  போன்று அறத்தை
அனைவரும்   உணரும்படி  செய்வதே தேவை. மாந்தர் பிறர் பொருளைச்
சுரண்டாமல்   காப்பது    போன்று  சிலரோ  பலரோ பொது அறத்தைக்
குலைக்காது  காத்தல்  அடுத்த கடமை. முதற் கடமையை வள்ளுவர் போல்
முழுமை