31. வெகுளாமை |
301. | செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் |
| காக்கினென் காவாக்கா லென். |
|
தன் சினம் பலிதமாகுமிடத்தில் சினம் கொள்ளாமல் இருப்பவனே சினங்காப்பவன்; பலிக்காத இடத்தில் சினத்தைக் காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன? |
302. | செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும் |
| இல்லதனின் தீய பிற. |
|
வலியோரிடம் சினம் கொண்டால், அதனால் கேடு விளையும். மெலியோரிடம் சினம் கொண்டாலும் அதை விடக் கேடு வேறொன்றுமில்லை. |
303. | மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய |
| பிறத்தல் அதனான் வரும். |
|
யார்மீது சினம் கொண்டாலும் அதை மறந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அந்தச் சினமே தீய விளைவுகளுக்குக் காரணமாகும். |
304. | நகையும் உவகையுங் கொல்லுஞ் சினத்தின் |
| பகையும் உளவோ பிற. |
|
சினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி மாத்திரமின்றி மனமகிழ்ச்சியும் மறைந்து போய் விடும். |
305. | தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் |
| தன்னையே கொல்லுஞ் சினம். |
|
ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும். இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும். |