316. | இன்னா எனத்தா னுணர்ந்தவை துன்னாமை |
| வேண்டும் பிறன்கட் செயல். |
|
ஒருவன் தன்னுடைய வாழ்க்கையில் துன்பமானவை என்று அனுபவித்து அறிந்தவற்றை, மற்றவர்க்குச் செய்யாமலிருக்க வேண்டும். |
317. | எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் |
| மாணாசெய் யாமை தலை. |
|
எவ்வளவிலும், எப்பொழுதும், எவரையும் இழிவுபடுத்தும் செயலை மனத்தால்கூட நினைக்காமல் இருப்பதே முதன்மையான சிறப்பாகும். |
318. | தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோ |
| மன்னுயிர்க் கின்னா செயல். |
|
பிறர் தரும் துன்பத்தால் தனக்கேற்படும் துன்பத்தை உணர்ந்தவன் அந்தத் துன்பத்தைப் பிற உயிர்களுக்குத் தரவும் கூடாதல்லவா? |
319. | பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா |
| பிற்பகல் தாமே வரும். |
|
பிறருக்குத் தீங்கு விளைத்துவிட்டோம் என்று ஒருவர் மகிழ்ந்து கொண்டிருக்கும்போதே, அதேபோன்ற தீங்கு அவரையே தாக்கும். |
320. | நோயெல்லா நோய்செய்தார் மேலவா நோய்செய்யார் |
| நோயின்மை வேண்டு பவர். |
|
தீங்கு செய்தவருக்கே தீங்குகள் வந்து சேரும்; எனவே தீங்கற்ற வாழ்வை விரும்புகிறவர்கள், பிறருக்குத் தீங்கிழைத்தல் கூடாது. |