பக்கம் எண் :

திருக்குறள்65அறம்

33. கொல்லாமை
 

321.

அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்

பிறவினை எல்லாந் தரும்.

 

எந்த   உயிரையும்  கொல்லாதிருப்பதே    அறச்செயலாகும்.  கொலை
செய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும்.
 

322.

பகுத்துண்டு பல்லுயி ரோம்புதல் நூலோர்

தொகுத்தவற்று ளெல்லாந் தலை.

 

இருப்போர்       இல்லாதோர்     என்றில்லாமல்,    கிடைத்ததைப்
பகிர்ந்துகொண்டு,    எல்லா     உயிர்களும்   வாழ  வேண்டும்   என்ற
சமநிலைக்கொள்கைக்கு ஈடானது வேறு எதுவுமே இல்லை.
 

323.

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்

பின்சாரப் பொய்யாமை நன்று.

 

அறங்களின்   வரிசையில்    முதலில்  கொல்லாமையும் அதற்கடுத்துப்
பொய்யாமையும் இடம் பெறுகின்றன.
 

324.

நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங்

கொல்லாமை சூழும் நெறி.

 

எந்த  உயிரையும்  கொல்லக் கூடாது எனும் நெறி காப்பதுதான் நல்லற
வழி எனப்படும்.
 

325.

நிலையஞ்சி நீத்தாரு ளெல்லாங் கொலையஞ்சிக்

கொல்லாமை சூழ்வான் தலை.

 

உலகியல்  நிலையை வெறுத்துத் துறவு பூண்டவர் எல்லோரையும் விடக்
கொலையை     வெறுத்துக்      கொல்லாமையைக்    கடைப்பிடிப்பவரே
சிறந்தவராவார்.