336. | நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும் |
| பெருமை யுடைத்திவ் வுலகு. |
|
இந்த உலகமானது, நேற்று உயிருடன் இருந்தவரை இன்று இல்லாமல் செய்து விட்டோம் என்ற அகந்தையைப் பெருமையாகக் கொண்டதாகும். |
337. | ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப |
| கோடியு மல்ல பல. |
|
ஒரு பொழுதுகூட வாழ்க்கையைப் பற்றிய உண்மையைச் சிந்தித்து அறியாதவர்களே, ஆசைக்கோர் அளவின்றி மனக்கோட்டைகள் கட்டுவார்கள். |
338. | குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே |
| உடம்போ டுயிரிடை நட்பு. |
|
உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு முட்டைக்கும் பறவைக் குஞ்சுக்கும் உண்டான உறவு போன்றதுதான். |
339. | உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி |
| விழிப்பது போலும் பிறப்பு. |
|
நிலையற்ற வாழ்க்கையில், உறக்கத்திற்குப் பிறகு விழிப்பதைப் போன்றது பிறப்பு; திரும்ப விழிக்க முடியாத மீளா உறக்கம் கொள்வதே இறப்பு. |
340. | புக்கி லமைந்தின்று கொல்லோ உடம்பினுள் |
| துச்சி லிருந்த உயிர்க்கு. |
|
உடலுடன் தங்கியுள்ள உயிருக்கு அதனைப் பிரிந்தால் வேறு புகலிடம் கிடையாது. |