356. | கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் |
| மற்றீண்டு வாரா நெறி. |
|
துறவற வாழ்வுக்குத் தகுதியுடையவராகச் செய்திடும் அனைத்தையும் கற்று, உண்மைப் பொருள் உணர்ந்து அதன்படி ஒழுகுபவர், மீண்டும் இல்லற வாழ்க்கையை விரும்ப மாட்டார்கள். |
357. | ஓர்த்துள்ளம் உள்ள துணரின் ஒருதலையாப் |
| பேர்த்துள்ள வேண்டா பிறப்பு. |
|
உண்மையை ஆராய்ந்து உறுதியாக உணர்பவர்கள் மீண்டும் பிறப்பு உண்டு எனக் கருத மாட்டார்கள். |
358. | பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ் |
| செம்பொருள் காண்ப தறிவு. |
|
அடுத்த பிறப்பு எனக் கூறப்படும் அறியாமையைப் போக்கித் தெளிந்த உண்மையை நிலைநாட்டுவதுதான் அறிவுடைமையாகும். |
359. | சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச் |
| சார்தரா சார்தரு நோய். |
|
துன்பங்கள் நம்மைச் சாராமல் இருக்க வேண்டுமானால், அத்துன்பங்களுக்குக் காரணமானவற்றை உணர்ந்து அவற்றின் மீதுள்ள பற்றை விலக்கிக் கொள்ள வேண்டும். |
360. | காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன் |
| நாமங் கெடக்கெடு நோய். |
|
விருப்பு, வெறுப்பு, அறியாமை இவற்றுக்கு இடம் தராதவர்களை நெருங்குகிற துன்பம் அழிந்துவிடும். |