37. அவா அறுத்தல் |
361. | அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றுந் |
| தவாஅப் பிறப்பீனும் வித்து. |
|
ஆசையை, எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றி முளைக்கும் விதை என்று கூறலாம். |
362. | வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது |
| வேண்டாமை வேண்ட வரும். |
|
விரும்புவதானால் பிறக்காமலே இருந்திருக்க வேண்டும் என்று ஒருவன் எண்ணுகிற அளவுக்கு ஏற்படுகிற துன்ப நிலை, ஆசைகளை ஒழிக்காவிடில் வரும். |
363. | வேண்டாமை யன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை |
| ஆண்டும் அஃதொப்ப தில். |
|
தீமை விளைவிக்கும் ஆசைகளை வேண்டாம் என்று புறக்கணிப்பதைப் போன்ற செல்வம் இங்கு எதுவுமில்லை; வேறு எங்கும் கூட அத்தகைய ஒப்பற்ற செல்வம் இல்லையென்றே கூறலாம். |
364. | தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றது |
| வாஅய்மை வேண்ட வரும். |
|
தூய்மை என்பது பேராசையற்ற தன்மையாகும். அத்தூய்மை வாய்மையை நாடுவோர்க்கே வாய்க்கும். |
365. | அற்றவ ரென்பார் அவாவற்றார் மற்றையார் |
| அற்றாக அற்ற திலர். |
|
ஆசையனைத்தும் விட்டவரே துறவி எனப்படுவார். முற்றும் துறவாதவர், தூய துறவியாக மாட்டார். |