366. | அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை |
| வஞ்சிப்ப தோரும் அவா. |
|
ஒருவரை வஞ்சித்துக் கெடுப்பதற்குக் காரணமாக இருப்பது ஆசையேயாகும். எனவே, ஆசைக்கு அடிமையாகக் கூடாது என்ற அச்சத்துடன் வாழ வேண்டும். |
367. | அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை |
| தான்வேண்டு மாற்றான் வரும். |
|
கெடாமல் வாழ்வதற்குரிய நிலை, ஒருவன் விரும்புமாறு வாய்ப்பதற்கு, அவன் பேராசைக் குணத்தை முற்றிலும் ஒழித்தவனாக இருக்க வேண்டும். |
368. | அவாவில்லார்க் கில்லாகுந் துன்பமஃ துண்டேல் |
| தவாஅது மேன்மேல் வரும். |
|
ஆசை இல்லாதவர்களுக்குத் துன்பம் இல்லை. ஆசை உண்டானால், அதைத் தொடர்ந்து துன்பமும் மேலும் மேலும் வந்து கொண்டிருக்கும். |
369. | இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னுந் |
| துன்பத்துள் துன்பங் கெடின். |
|
பெருந்துன்பம் தரக்கூடிய பேராசை ஒழிந்தால் வாழ்வில் இன்பம் விடாமல் தொடரும். |
370. | ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே |
| பேரா இயற்கை தரும். |
|
இயல்பாகவே எழும் அடங்காத பேராசையை அகற்றி வாழும் நிலை, நீங்காத இன்பத்தை இயல்பாகவே தரக்கூடியதாகும். |