பக்கம் எண் :

ஊழியல்76கலைஞர் உரை

376.

பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்

சொரியினும் போகா தம.

 

தனக்கு உரிமையல்லாதவற்றை எவ்வளவுதான் பாதுகாப்பாக வைத்தாலும்
அவை தங்காமல் போய்விடக் கூடும்; உரிமையுள்ளவற்றை எங்கே கொண்டு
போய்ப் போட்டாலும் அவை எங்கும் போகமாட்டா.
 

377.

வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி

தொகுத்தார்க்குந் துய்த்த லரிது.

 

வகுத்து முறைப்படுத்திய வாழ்க்கை நெறியை  ஒட்டி  நடக்கா விட்டால்
கோடிப்பொருள்   குவித்தாலும்,  அதன்  பயனை  அனுபவிப்பது என்பது
அரிதேயாகும்.
 

378.

துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால

ஊட்டா கழியு மெனின்.

 

நுகர்வதற்குரியது  எதுவுமில்லை    என்ற     உறுதியினால்,   தம்மை
வருத்தக்கூடிய உணர்வுகள் வந்து வருத்தாமல்  நீங்கிவிடுமானால்  துறவறம்
மேற்கொள்வர்.
 

379.

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்

அல்லற் படுவ தெவன்.

 

நன்மையும் தீமையும் வாழ்க்கையில் மாறி மாறி  வரும்.  நன்மை கண்டு
மகிழ்கிறவர்கள், தீமை விளையும்போது மட்டும் மனம் கலங்குவது ஏன்?
 

380.

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

சூழினுந் தான்முந் துறும்.

 

இயற்கை  நிலையை  மாற்றி மற்றொரு செயற்கை நிலையை அமைத்திட
முனைந்தாலும்,   இயற்கை  நிலையே  முதன்மையாக  வந்து    நிற்பதால்
அதைவிட வலிமையானவையாக வேறு எவை இருக்கின்றன?