பக்கம் எண் :

106
 

(க-து.)செல்லுங் கதிக்கு உறுதுணையாக நல்வினைகள் செய்துகொள்ளல் வேண்டும்.

(வி-ம்.)மற்று, ஏ : அசை. ஆங்கு, பிறிதெதுவும் துணை வராததுபோல என்னும்பொருட்டு. போற்றிப் புனைந்தவென்பது, அச்செயல்களினும் புண்ணியம் ஈட்டுஞ் செயல் முதன்மையான தென்னுங் குறிப்பிற்று இது, குறிப்பெச்சமாக1 வருவித்து உணர்ந்து கொள்ளப்படும்.

(10)

13.தீவினையச்சம்

(தீவினை செய்தற்கு அஞ்சுதல்)

121. துக்கத்துள் தூங்கித் துறவின்கட் சேர்கலா
மக்கள் பிணத்த சுடுகாடு - தொக்க
விலங்கிற்கும் புள்ளிற்கும் காடே புலன்கெட்ட
புல்லறி வாளர் வயிறு.

(பொ-ள்.)சுடுகாடு துக்கத்துள் தூங்கித் துறவின் கண் சேர்கலா மக்கள் பிணத்த - உலகத்திலுள்ள சுடுகாடுகள், வாழ்க்கைத் துன்பங்களிற் கிடந்தழுந்தி, அவற்றினின்று நீங்குதற்குரிய துறவற நெறியிற் சார்ந்தொழுகாத கீழ்மக்களின் பிணங்களையுடையன; புலன் கெட்ட புல்லறிவாளர் வயிறு - ஆனால் நல்லறிவு கெட்ட புல்லறிவாளரின் வயிறுகளோ, தொக்க விலங்கிற்கும் புள்ளிற்கும் காடு- தொகுதியான விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் இடுகாடுகளாயிருக்கின்றன.

(க-து.)பிற உயிர்களைக் கொன்றுண்ணுந் தீ வினைக்கு அஞ்சுதல் வேண்டும்.


1. தொல். எச். 44.