பக்கம் எண் :

11
 

யினும் இழந்தவனே என்றார். செல்வத்தைச் செலவு செய்தற்குரிய துறைகள் பலவும் இச்செய்யுள் எடுத்துக் காட்டினமை நினைவிருத்துதற்குரியது.

(9)

10. உடாஅதும் உண்ணாதும் தம்உடம்பு செற்றும்
கெடாஅத நல்லறமும் செய்யார் - கொடாஅது
வைத்தீட்டி னார்இழப்பர், வான்தோய் மலைநாட !
உய்த்தீட்டும் தேனீக் கரி.

(பொ-ள்.)வான் தோய் - வானத்தைப் பொருந்துகின்ற, மலைநாட - மலைநாட்டுத் தலைவனே ! உடாதும் - நல்ல ஆடைகள் உடுக்காமலும், உண்ணாதும் - உணவுகள் உண்ணாமலும், தம் உடம்பு செற்றும் - தம் உடம்பை வருத்தியும் ; கெடாத நல் அறமும் செய்யார் - அழியாத சிறந்த புண்ணியமுஞ் செய்யாமலும், கொடாது - வறிய வர்க்குக் கொடாமலும், ஈட்டி வைத்தார் - பொருளைத் தொகுத்து வைத்தவர்கள், இழப்பர் - அதனை இழந்து விடுவர், உய்த்து ஈட்டும் தேன் ஈ- பல பூக்களிலிருந்து கொண்டுபோய்த் தொகுத்து வைக்கும் தேனீக்கள், கரி - அதற்குச் சான்று.

(க-து.)அறவழியிற் பொருளைச் செலவு செய்யாதவர், ஒரு காலத்தில் தேனீயைப்போல அப்பொருளை இழந்துவிடுவர்.

(வி-ம்.)கள்ளர் பகைவர் முதலியோராற் கட்டாயம் இழந்து விடுவர் என்பது கருத்து; அதன் பொருட்டே, கட்டாயம் ஒரு காலத்தில் தான் தொகுக்குந் தேனை இழந்துவிடுந் தேனீ உவமையாயிற்று. உடாமையும் உண்ணாமையுங் காரணமாக நோய் முதலியவற்றை உண்டாக்கித் தம் உடம்பை வருத்திக்கோடலின், ‘தம் உடம்பு செற்றும்' என்றார். துறவோரைப் போல அங்ஙனம் வருத்திக் கொண்டாலும் அவர்போல் அறச்செயலேனுஞ் செய்கின்றனரோவெனின் அதுவுமின்றென்றற்குக். ‘கெடாதநல் அறமுஞ்செய்யார்' என்று அதன்பிற் கூறினார். மலைநாட என்று ஓர் ஆண்மகனை முன்னிலைப் படுத்திக் கூறும் முறைமையில் இச் செய்யுள் அமைந்தது.