127. யாஅர் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத் தேருந் துணைமை யுடையவர் - சாரல் கனமணி நின்றிமைக்கும் நாட!கேள்; மக்கள் மனம்வேறு செய்கையும் வேறு. (பொ-ள்.)யார் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத் தேரும் துணைமை உடையவர் - எவரொருவர், ஒருவரது உள்ளத்தைத்தேர்ந்து துணியும் ஆற்றலுடையவர்?, சாரல் கன மணி நின்று இமைக்கும் நாட கேள் - மலைச்சாரலில் பெரிய மாணிக்க மணிகள் கிடந்து ஒளிவிடும் நாடனே கேள்; மக்கள் மனம் வேறு செய்கையும் வேறு - உலகத்தில் மக்களின் உள்ளமும் வேறு செய்கையும் வேறாயிருக்கின்றனவே! (க-து.)நட்பாராய்தலிலும் பலகால் பலவழியால் ஆராய்ந்து துணிதல் வேண்டும். (வி-ம்.)நற்செயல் கண்டவுடன் உள்ளமும் அத்தகையதென்று உடனே துணிந்துவிடலாகாதென்பது பொருள். ‘யாரொருவர் உடையவர்' என்னும் வினா, அரிதாதல் நோக்கி எழுந்தது. துணைமை, துணையால் உண்டாம் ஆற்றல் கருதி அப்பொருட்டாயிற்று. (7) 128. உள்ளத்தான் நள்ளா துறுதித் தொழிலராய்க் கள்ளத்தான் நட்டார் கழிகேண்மை -தெள்ளிப் புனற்செதும்பு நின்றலைக்கும் பூங்குன்ற நாட! மனத்துக்கண் மாசாய் விடும். (பொ-ள்.)உள்ளத்தான் நள்ளாது உறுதித் தொழிலராய்க் கள்ளத்தான் நட்டார் கழிகேண்மை அகத்தால் நேயங்கொள்ளாது, ஆனால் உறுதியான நேயத்துக்குரிய செய்கைகளை மேலே உடையவராய்க், கரவினால் நேயஞ் செய்தவரது மிக்க நட்பு! புனல் தெள்ளிநின்று செதும்பு அலைக்கும் பூ குன்ற நாட - நீர் தெளிவுடைய தாய் ஒழுகிச் சேற்றை அலைத்தொதுக்கும் அழகிய மலைகள் விளங்குகின்ற நாட்டையுடையவனே!, மனத்துக்கண்
|