பக்கம் எண் :

112
 

மாசாய்விடும் - என்றும் மனத்தில் வேதனை தருங் குற்றமாய் முடியும்.

(க-து.)மேலோடு செய்யும் நட்புக்கு அஞ்சுதல் வேண்டும்.

(வி-ம்.)உன்ளத்தானென்றது ஈண்டு அகத்தன்பினால் என்னும்பொருட்டு; கழிகேண்மையென்றார் அத்தகைய நட்புக்கு முதலில், அவ்வாறு மிக நெருக்கமாயிருப்பதும் ஓர் அறிகுறியாதலின். ‘அல்வழியெல்லாம் உறழென மொழிப'1 வாதலின் எதுகை நோக்கிப் ‘புனற்செதும்பு' எனத் திரிபேற்றது.

(8)

129. ஓக்கிய ஒள்வாள்தான் ஒன்னார்கைப் பட்டக்கால்
ஊக்கம் அழிப்பதூஉம் மெய்யாகும் - ஆக்கம்
இருமையுஞ் சென்று சுடுதலால் நல்ல
கருமமே கல்லார்கண் தீர்வு.

(பொ-ள்.)ஓக்கிய ஒள் வாள் தன் ஒன்னார் கைப்பட்டக்கால் ஊக்கம் அழிப்பதூஉம் மெய்யாகும் - ஓங்கிய தனது ஒளிமிக்க வாள் தன் பகைவர் கையில் அகப்பட்டு விட்டால். அது தனது மனவலிமையைக் கெடுப்பதும் திண்ணமாகும்; ஆக்கம் - அவ்வாறே தீயோர் கைப்பட்ட தனது செல்வம் இருமையும் சென்று சுடுதலால் - இம்மை மறுமை என்னும் தன் இருமைப் பயன்களையும் தொடர்ந்து கெடுத்தலால், நல்ல கருமமே கல்லார்கண் தீர்வு - அத்தகைய மூடர்களிடத்தினின்று நட்பு நீங்குதல் அறச்செய்கையேயாகும்.

(க-து.)கல்லாத முடர் சேர்க்கையினின்று அஞ்சி விலகுதல் வேண்டும்.

(வி-ம்.)‘ஊக்கம் அழிப்பதும்' என்னும் உம்மை ‘மேல் உயிரை அழிப்பதும்' என்னும் எதிரது தழீஇயது. ‘கைப்பட்டக்கால்' என்பதை ஆக்கம் என்பதற்கும், ‘ஆகும்' என்பதைக் கருமமே என்பதற்குங் கொள்க. தனது பொருள் கல்லாத மூடர்வழியாகப் பலர்க்குந் தனக்குந் தீங்கு விளைத்தலாலும், இம்மையிற் செய்த வினைகள்


1. தொல். புள்ளி. 73.