பக்கம் எண் :

117
 

(பொ-ள்.)வைப்புழிக்கோட்படா - வைத்த இடத்திலிருந்து பிறரால் கரவிற் கொள்ளப்படாது; வாய்த்து ஈயின் கேடு இல்லை - நன்மாணாக்கர் வாய்த்து அவர்க்குக் கற்பிக்க நேருமானால் அதனால் அழிதல் இல்லை; மிக்க சிறப்பின் அரசர் செறின் வவ்வார் - தம்மினும் மிக்க செல்வாக்கினால் அரசர் வெகுளல் நேரினும் கவர இயலாதவராவர்; எச்சம் என ஒருவன் மக்கட்குச் செய்வன விச்சை மற்று அல்லபிற - ஆதலால்; வைப்பு என ஒருவன் தன் மக்கட்குத் தேடி வைக்கத்தக்கவை கல்வியே, பிற அல்ல.

(க-து.)கல்வியே மக்கட்குத் தேடி வைக்கத் தக்க அழியாத செல்வம்.

(வி-ம்.)"கேடில் விழுச்செல்வங் கல்வி"1 யாதலின் இங்ஙனங் கூறினார். வாய்த்து என்றார். வாய்ப்பது அருமையாதலாலும், தக்கோர்க்கு ஈயின் அவர் வாயிலாகத் தமக்கும் வேறு பிறர்க்கும் பெருகுதலுண்டாதலாலுமென்க. மற்று : அசை; பிற என்னுங் குறிப்புச் செல்வத்தின்மேற்று.

(4)

135. கல்வி கரையில! கற்பவர் நாள்சில;
மெல்ல நினைக்கின் பிணிபல; - தெள்ளிதின்
ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து.

(பொ-ள்.)கல்வி கரை இல - கல்விகள் அளவில்லாதன; கற்பவர் நாள் சில - ஆனால், கற்பவர் வாழ்நாட்களோ சிலவாகும்; மெல்ல நினைக்கின் பிணி பல - சற்று அமைதியாக நினைத்துப்பார்த்தால் அச் சில வாழ்நாட்களில் பிணிகள் பலவாயிருக்கின்றன; தெள்ளிதின் ஆராய்ந்து அமைவுடைய கற்ப நீர் ஒழியப் பால் உண்குருகின் தெரிந்து - நீர் நீங்கப் பாலை உண்ணும் பறவையைப்போல அறிஞர்கள் பொருத்தமுடைய நூல்களைத்


1. குறள். 40 : 10