தென்பது தோன்றத் ‘தொல்லை வருணத்து' எனவும், பிறப்பின் உயர்வு தாழ்வு கருதுதல் இயல்பன்று, என்பது தோன்றக் ‘காணின்' எனவும், எக்குடி பிறப்பினுங் கல்வி கேள்விகளுடையோரே மக்கள் என மதிக்கற்பாலரென்பது தோன்ற ‘மகன்' எனவுங் கூறப்பட்டன. இகழார்; முற்றெச்சம்; காணாய்: முன்னிலை அசை. ஆறு கடத்த லென்னுங் குறிப்பால், வாழ்க்கையாற்றைக் கடந்து கரை சேர்தற்குக் கற்றோர் துணை இன்றியமையாததென்பது பெறப்படும். (6) 137. தவலருந் தொல்கேள்வித் தன்மையுடையார் இகலிலர் எஃகுடையார் தம்முட் குழீஇ நகலின் இனிதாயிற் காண்பாம் அகல்வானத்(து) உம்ப ருறைவார் பதி. (பொ-ள்.)தவல் அரு தொல் கேள்வித் தன்மையுடையார் இகல் இலர் எஃகு உடையார் தம்முள் குழீஇ நகலின் இனிதாயின்-அழிதலில்லாத பழைமையான நூற் கேள்விப் பேறுடையராய் முரணிலராய்க் கூரறிவுடையராய் விளங்குங் கற்றோருட் சேர்ந்து அளவளாவி மகிழ்தலினும் இனிமையுடையதாயின், காண்பாம் அகல்வானத்து உம்பர் உறைவார் பதி -அகன்ற விண்ணின் மேலிடத்தில் உறையுந்தேவர்களின் திருநகரைக் காண முயல்வோம். (க-து.)துறக்க வின்பத்தினுங் கல்வியின்பமே உயர்ந்தது. (வி-ம்.) இஃது, அறிவு பொருளாகத் தோன்றும் உவகை;1தொன்றுதொட்டு ஆசிரியமரபினாற் கேட்கப்பட்டு வரும் நூற் கேள்வியென அதன் சிறப்பியல்பு தோன்றும் பொருட்டுத் ‘தொல் கேள்வி' யென்றதோடு, அவ்வகைத் தன்மையுடையா ரெனவுங் கிளந்தோதப்பட்டது. இகலென்றது ஈண்டு, நூல் நெறி உலக நெறியென்னும் இருவகை வழக்கோடும் முரண் என்க. இனி தாகாதென்றற்கு இனிதாயிற் காண்பாம் எனப்பட்டது. காண்பாமென்றது, பாராமுகமான சொல், மேலிடம். 
 1. தொல். மெய்ப். 11. 
 |