பக்கம் எண் :

123
 

(வி-ம்.)உலறுதல் செழுமைகெடுதலாதலின் பொலிவழிந்தெனப்பட்டது; உடம்பழிந்தக்கண்ணு மென்பதில் உணவில்லாத காலத்தும் என்னும் பொருள் குறிப்பிற் புலப்படும் கொள்கையென்றது, நல்லுணர்வு நல்லாழுக்கங்கள், தலைவருதல் ஈண்டு மிகுதிமேற்று. கொடியோடிப் படரும் புல் கூறினார் வளம் உணர்த்தற்கு, "பசி பெரிதாயினும் புல்மேயா தாகும் புலி"1என்பர் பிறரும். மற்று : அசை.

(1)

142. சான்றாண்மை சாயல் ஒழுக்கம் இவைமூன்றும்
வான்றோய் குடிப்பிறந்தார்க் கல்லது - வான்றோயும்
மைதவழ் வெற்ப! படாஅ பெருஞ்செல்வம்
எய்தியக் கண்ணும் பிறர்க்கு.

(பொ-ள்.)வான் தோயும் மைதவழ் வெற்ப - மேகங்கள் தவழ்கின்ற வானளாவிய மலைகளையுடைய நாடனே!, சான்றாண்மை சாயல் ஒழுக்கம் இவை மூன்றும் வான்தோய் குடிப்பிறந்தார்க்கல்லது படா பெருஞ் செல்வம் எய்தியக்கண்ணும் பிறர்க்கு - பெருந்தன்மை, மென்மை, கடைப்பிடி என்னும் இவை மூன்றும் உயர்வு பொருந்திய குடியிற் பிறந்தவர்க்கல்லது மிக்க செல்வம் உண்டான காலத்தும் பிறர்க்கு உண்டாகமாட்டா.

(க-து.)நல்லொழுக்கங்கள் உயர்குடிப்பிறந்தோர்க்கு இயல்பாகவே மலரும்.

(வி-ம்.)"சான்றாண்மை தீயினம் சேரக் கெடும்"2என்புழிப்போல ஈண்டும் அச்சொல் பெருந்தன்மைமேற்று, "சாயல் மென்மை”3யென்பர் ஆசிரியர் தொல்காப்பியர். ஒழுகுதலாவது ஒன்றைத் தொடர்புறச் செய்தலாதலின். அது கடைப்பிடியென்றறியற்பாற்று, திருவள்ளுவரில் அன்புடைமை, விருந்தோம்பல், இனிமை கூறல் முதலியவாக நல்லொழுக்கங்கள் பலவுங் கூறிவரும் ஆசிரியர், இடையே ‘ஒழுக்கமுடைமை' எனத் தனியதிகாரம் ஒன்று


1.பழமொழி . 70.
2.நாலடி. 18 : 9.
3. தொல். உரி. 27.