கொள்ளப்படும். தீயவை செய்தால் பலருந் தூற்றும் பழியாக முடியும்; எல்லாம் உணரும் குடிப்பிறப்பின் ஊதியம் என்னோ புணரும் ஒருவர்க்கெனின் - அவ்வாறானால், உயர்குடிப்பிறப்பு ஒருவர்க்கு வாய்க்குமாயின் எல்லா நன்மைகளும் இயல்பாகவே உணர்ந்தொழுகுதற்குரிய தகுதி வாய்ந்த அக் குடிப்பிறப்பினால் அவர் அடையும் ஊதியந்தான் யாதோ! (க-து.)நல்லவை செய்தலை இயல்பாக உடையது உயர்குடிப் பிறப்பெனின் அந்நிலையே ஆக்கம் என்பது. (வி-ம்.)பல்லவர் என்னும் மிகுதிப்பாடு, தீயவை சிறிது செய்யினும் என்னும் பொருட்குறிப்பு உணர்த்திற்று. இது போல்வன "குறிப்பிற் றோன்றலும்"1என்பதனால் உணரப்படும். எல்லாம் உணரும் என்றது, குடிப்பிறப்பின் சிறப்பியல்பு உணர்த்திற்று. ஊதியமென்னோ என்றது, அதனினும் ஊதியம் மற்றென்னோ என்னும் உட்கோளுடையது. புணரும் ஒருவர்க்கெனின் என்றது, அதன் அருமை தோன்ற நின்றது. இச்செய்யுள், பழித்தது போலப் புகழ்தலாய்க்குடிப்பிறப்பின் உயர்வை விளக்கிற்று. மேல்வருஞ் செய்யுளும் இத்தகைத்து. (4) 145. கல்லாமை அச்சம், கயவர் தொழிலச்சம், சொல்லாமை யுள்ளுமோர் சோர்வச்சம், - எல்லாம் இரப்பார்க்கொன் றீயாமை அச்சம்; மரத்தாரிம் மாணாக் குடிப்பிறந் தார். (பொ-ள்.)கல்லாமை அச்சம், கயவர் தொழில் அச்சம், சொல்லாமை யுள்ளும் ஓர் சோர்வு அச்சம். எல்லாம் இரப்பார்க்கு ஒன்று ஈயாமை அச்சம் - உயர்குடிப் பிறந்தார்க்குப், படியாமை ஓர் அச்சம், கீழோர் தொழிலொன்று செய்தலும் அச்சம், சொல்லத் தகாதவற்றுள் தவறிச் சொல்லிவிடுதலொன்றும் அச்சம், இரப்பார்க்கு ஒன்று ஈயாமை முழுவதும் அச்சம்; இம் மாணாக் குடிப்
1. தொல். பெய. 3.
|