பக்கம் எண் :

131
 

(பொ-ள்.)இசையும் எனினும் இசையா தெனினும் வரை தீர எண்ணுவர் சான்றோர் - கைகூடுமெனினும் கை கூடாதெனினும் பழித்தலில்லாத வகையில் அரிய காரியங்களையே மேன்மக்கள் எண்ணிச் செய்வர்; விசையின் நரிமா உளம் கிழித்த அம்பினின் தீதோ அரிமாப் பிழைப்பு எய்த கோல் - விரைவோடு நரி என்னும் விலங்கின் நெஞ்சைக் கிழித்துச் சென்ற அம்பைவிடப் பழிப்புடையதோ, சிங்கத்தினிடம் தவறுதலைப் பொருந்திய அம்பு?

(க-து.)அரிய காரியங்களையே எண்ணிச் செய்வது மேன்மக்கள் இயல்பு.

(வி-ம்.)வசையாவது, ‘சிறியர் செயற்கரிய செய்கலாதார்"1என்பது, ‘அரிமாப் பிழைப்பெய்த' என்பதற்கு, அரிமா தவறிப் போதலுக்கு ஏதுவான நிலையையடைந்த கோல் என்பது கருத்து. "கான முயலெய்த அம்பினில் யானை, பிழைத்தவேல் ஏந்தல் இனிது"2என்னுந் திருக்குறளை ஈண்டு நினைவு கூர்க.

(2)

153. நரம்பெழுந்து நல்கூர்ந்தா ராயினுஞ் சான்றோர்
குரம்பெழுந்து குற்றங்கொ ண்டேறார்; - உரங்கவறா
உள்ளமெனும் நாரினாற் கட்டி உளவரையாற்
செய்வர் செயற்பா லவை.

(பொ-ள்.)நரம்பெழுந்து நல்கூர்ந்தா ராயினும் சான்றோர் குரம்பெழுந்து குற்றங்கொண்டு ஏறார் - உடம்பில் நரம்பு மேலே தோன்றும்படி3வறுமையெய்தினாராயினும் மேன்மக்கள் தமது நல்லொழுக்கத்தின் வரம்பு கடந்து பிழையான வழிகளை மேற்கொண்டு அவற்றில் தொடர்ந்து செல்லமாட்டார்; உரம் கவறா உள்ளமெனும் நாரினால் கட்டி - அறிவு பனைவிட்டமாக முயற்சியென்னும் நாரினால் அத் தீய நினைவைக் கட்டுப்படுத்தி, உளவரையால் செய்வர் செயற்பாலவை - செய்தற்குரிய


1.குறள். 3 : 6.
2.குறள், 78 : 2.
3. திருமுருகாற். 130.