பக்கம் எண் :

132
 

நற்செயல்களைத் தமக்குள்ள பொருளளவினால் செய்து வருவர்.

(க-து.)வறுமையினால் மேன்மக்கள், தவறிய வழிகளிற் செல்லார்.

(வி-ம்.)குரம்பென்னுஞ் சொல் வரம்பென்னும் பொருட்டு; "குரம்புகொண் டேறி"1என்றார் பிறரும். நார் என்று வந்தமையாற் கவறு என்பது பனைவிட்டத்துக் காயிற்று; பிளவுள்ள பனம்பட்டை கவறெனப்படும்; கவர் என்னுஞ்சொல் ரகர றகர வேற்றுமையின்றிக் கவறு என வந்தது.

(3)

154. செல்வுழிக் கண்ணொருநாட் காணினுஞ் சான்றவர்
தொல்வழிக் கேண்மையிற் றோன்றப் புரிந்தியாப்பர்;
நல்வரை நாட! சிலநாள் அடிப்படின்
கல்வரையும் உண்டாம் நெறி:

(பொ-ள்.)செல்வுழிக்கண் ஒருநாள் காணினும் சான்றவர் தொல்வழிக் கேண்மையின் தோன்றப் புரிந்துயாப்பர் - வழிச்செல்லுங் காலத்தில் ஒருவரை ஒரு நாள் கண்டாலும் மேன்மக்கள் பழைமைவழியான நேயம்போல் தோன்ற அன்புசெய்து அவரைப் பிணிப்பர்; நல்வரை நாட - உயர்ந்த மலைகளையுடைய நாடனே!. சில நாள் அடிப்படின் கல் வரையும் உண்டாம் நெறி - சில நாள் நடந்து பழகியதாயின் கல்லுள்ள மலையும் வழி உண்டாகப் பெறும்.

(க-து.)ஒரு நாள் பழகினும் சான்றோர் பிறருள்ளத்தைக் கவர்ந்துவிடுவர்.

(வி-ம்.)பலகாற் பழகிய நேயம்போல் என்றற்குத் ‘தொல்வழிக் கேண்மையின்' எனப்பட்டது. அடிப்படின் - பயின்றால்; கால் பட்டுப் பயின்றாலென்க. பலநாட்பழகிய காரணத்தால் நட்புண்டாகப் பெறுதலில் வியப்பொன்று மில்லையே என்றற்கு, ‘அடிப்படின் நெறியுண்


1. மணிமே. 18 : 3.