யிலன் தீச்சொற்கண் மூங்கை"1முதலிய பிறர் வாய் மொழிகளும் நினைவு கூர்க. இம் மூவகை யறமே போதுமென்பார் "யாதும் அறங் கூறவேண்டா" என்றார். (8) 159. பன்னாளுஞ் சென்றக்கால் பண்பிலார் தம்முழை என்னானும் வேண்டுப என்றிகழ்ப; - என்னானும் வேண்டினும் நன்றுமற் றென்று விழுமியோர் காண்டொறுஞ் செய்வர் சிறப்பு: (பொ-ள்.)பல் நாளும் சென்றக்கால் - பலமுறையும் ஒருவர் சென்றால், ‘பண்பிலார் - நற்பண்பில்லாத கீழ் மக்கள், தம் உழை என்னானும் வேண்டுப என்று இகழ்ப - தம்மிடம் ஏதாவது உதவி வேண்டுவார் என்று அவரை அவமதிப்பர்; விழுமியோர் - ஆனால் மேன்மக்கள், என்னானும் வேண்டினும் நன்று என்று - அவர் ஏதாவது உதவி விரும்பினாலும் நல்லது என்று கருதி, காண்டொறும் செய்வர் சிறப்பு - அவரைப் பார்க்கும்போதெல்லாம் பெருமை செய்வர். (க-து.)மேன்மக்கள் பிறர்க்கு உதவி செய்தலில் விருப்பமுடையவராயிருப்பர். (வி-ம்.)பன்னாளென்றது, பலமுறை யென்னும் பொருட்டு. ‘பண்பிலார்' என்னுஞ் சொல் படர்க்கையாதலின்.2‘சென்றக்கால்' என்னும் படர்க்கையிடத்திற்குரிய வினை வந்தது. என்னானும் வேண்டினும் என்றற்கு எது வேண்டினாலும் என்றுரைத்தலும் ஒன்று. (9) 160. உடைய ரிவரென் றொருதலையாப் பற்றிக் கடையாயார் பின்சென்று வாழ்வர் - உடைய பிலந்தலைப் பட்டது போலாதே, நல்ல குலந்தலைப் பட்ட விடத்து. (பொ-ள்.)உடையார் இவர் என்று ஒரு தலையாப்பற்றிக் கடையாயார் பின் சென்று வாழ்வர் - பொருளுடையார் இவர் என்று உறுதியாகப் பற்றி மக்களிற் பெரும்,
1. ஏலாதி. 19. 2. தொல். கிளவி. 30.
|