பாலார் கீழ்மக்கள் பின்சென்று உயிர் வாழ்வர்; உடையபிலம் தலைப்பட்டது போலாதே நல்ல குலம் தலைப்பட்ட விடத்து-சிறந்த மேன்மக்களினத்தைச் சேரப்பெற்ற போது, அஃது உரிமையுடைய ஒரு பொருட்சுரங்கத்தைத் தலைப்பட்டதுபோ லாகாதோ? (க-து.)மேன்மக்கள் சேர்க்கையே எல்லா நலங்களும் பெருக அடைவதற்குரியது. (வி-ம்.)பொருளொன்றே கருதி யென்றற்கு ‘உடையார் இவர்' என்றும், பொருளுடையராயினுங் குணநலமில்லாதார் கீழ்ப்பட்டவரே யென்றற்கு ‘கடையாயார்' என்றுங் கூறினார். பற்றி-ஆதரவாகக் கொண்டு. தொங்கித் தொடரும் எளிமை, தோன்றப் ‘பின்சென்று வாழ்வர்' என்றார். மேன்மக்கள் எஞ்ஞான்றும் பிறர்க்குரியராதலின், உரிமையுடைய பிலம் என்றற்கு ‘உடையபிலம்' எனப்பட்டது. தமக்குடைமையான பிலம் எனப் பொருள் விரித்தலுமாம். "உடைப்பெருஞ் செல்வர்"1என்றார் பிறரும். ஏகாரம் : வினா. (10) 17. பெரியாரைப் பிழையாமை [பெரியாரை அவமதித்து நடவாமை] 161. பொறுப்பரென் றெண்ணிப் புரைதீர்ந்தார் மாட்டும் வெறுப்பன செய்யாமை வேண்டும்; - வெறுத்தபின் ஆர்க்கும் அருவி யணிமலை நன்னாட! பேர்க்குதல் யார்க்கும் அரிது. (பொ-ள்.)பொறுப்பர் என்று எண்ணிப் புரைதீர்ந்தார் மாட்டும் வெறுப்பன செய்யாமை வேண்டும் - பொறுத்துக் கொள்வார் என்று நினைத்து மாசுநீங்கிய பெரியோரிடத்திலும் அவர் வருந்தத்தக்க பிழைகளைச் செய்யாதிருத்தல் வேண்டும்; வெறுத்தபின் - அவர் உள்ளம் அதனால் வருந்தியபின், ஆர்க்கும் அருவி அணி மலை நல்
1. புறம், 188.
|