பக்கம் எண் :

138
 

நாட - ஆரவாரித்தொலிக்கும் அருவிகளையுடைய அழகிய மலைகள் பொருந்திய சிறந்த நாடனே; பேர்க்குதல் யார்க்கும் அரிது - அவ் வருத்தத்தால் உண்டாகுந் தீங்கை நீக்கிக் கொள்ளுதல் எத்தகையவர்க்கும் இயலாது.

(க-து.)பெரியோரை அவமதித்தொழுகினால் தீர்வில்லாத தீங்குண்டாகும்.

(வி-ம்.)பெரியோர் பொறுத்தற்குரியோராயினும் அவர் உள்ளத்துக்கு ஆகாதன அவரொழுகலாற்றிற்கு ஊறு பயக்குமாதலின் ‘வெறுப்பன செய்யாமை வேண்டும்' எனவும், இவை பொருந்தாதன என்று அவர் கருதுதலே ஈண்டு வருந்தியதாகுமாதலின் ‘வெறுத்தபின்' எனவும். எத்தகைய ஆற்றல் படைத்தவர்க்கும் அதனால் விளையுந்தீங்குகளை நீக்கிக்கொள்ளுதல் அரிதாகுமாதலின் ‘யார்க்கும்' எனவுங் கூறினார். "பூவுட்கும் கண்ணாய் பொறுப்பரெனக் கருதி யாவர்க்கேயாயினும் இன்னா செயல் வேண்டா"1என்றார் பிறரும். புரை தீர்ந்தார் மாட்டும் என்னும் உம்மை உயர்வொடு எச்சம்.

(1)

162. பொன்னே கொடுத்தும் புணர்தற் கரியாரைக்
கொன்னே தலைக்கூடப் பெற்றிருந்தும் - அன்னோ
பயனில் பொழுதாக் கழிப்பரே, நல்ல
நயமில் அறிவி னவர்.

(பொ-ள்.)பொன்னே கொடுத்தும் புணர்தற்கு அரியாரை - பொன்னையே விலையாகக் கொடுத்தும் நட்புச் செய்தற்கு அரியரான பெரியோர்களை, கொன்னே தலைக்கூடப் பெற்றிருந்தும் - பொருட் செலவில்லாமலே அவரை நட்புச் செய்து கொள்ளும் நிலை பெற்றிருந்தும். நல்ல நயம் இல் அறிவினவர் அன்னோ பயனில் பொழுதாக் கழிப்பரே - சிறந்த பண்புடைமையில்லாத அறிவினையுடைய பேதையர் ஆ, தம்முடைய வாழ்நாட்களைப் பயன் இல்லாத வீண் காலமாகக் கழிக்கின்றனரே!


1.பழமொழி. 43.