பக்கம் எண் :

143
 

விளங்கிற்று. தகல்: தொழிற்பெயர். துன்னியென்பதற்குக் கிளைகள் நெருங்கியென உரைத்தலுமாம். குளிர் மரமாதலின் குழை கொண்டு தாழ்ந்தவெனக் கூறப்பட்டது. உழை - இடம்; ஈண்டு நிழல் பயக்கும் இடமென்க. ஒருங்கு என்றார், வேறுபாடு கருதாமைப் பொருட்டு.

(7)

168. தெரியத் தெரியுந் தெரிவிலார் கண்ணும்
பிரியப் பெரும்படர்நோய் செய்யும்; - பெரிய
உலவா இருங்கழிச் சேர்ப்ப யார்மாட்டும்
கலவாமை கோடி யுறும்.

(பொ-ள்.)தெரியத் தெரியும் தெரிவிலார் கண்ணும் நூற்பொருள்களை விளங்கத் தெளியும் தெளிவில்லாதவரிடத்தும், பிரியப் பெரும்படர் நோய் செய்யும் - அவரைப் பிரிய அப் பிரிவு பெரிய நினைவுத் துன்பம் உண்டாக்கும்; பெரிய உலவா இரு கழிச் சேர்ப்ப-வளங்கெடாத கருநிறமான பெரிய கழிக்கரையை யுடையோனே, யார் மாட்டும் கலவாமை கோடி உறும் - ஆதலால், பெரியோரிடத்தன்றிப்பிறர் யாரிடத்திலும் நேயங்கொள்ளாமை கோடிப்பங்கு நன்மையாகும்.

(க-து.)ஆராய்ந்து பெரியோரிடமே நேயங்கொள்ளுதல் வேண்டும்.

(வி-ம்.)பிரிய அப் பிரிவு நோய் செய்யும் என்று கொள்க. படர்-நினைவு "படரே உள்ளல்"1என்பது தொல்காப்பியம்; படர் நோய்-நினைதலாலுண்டாகும் வருத்தம். நெய்தல் நிலம் கார் காலத்தில் நெல்விளைத்தும் வேனிற் காலத்தில் உப்பு விளைத்தும் என்றும் வளங்கொடாதிருத்தலின் "உலவாக் கழி" எனப்பட்டது. ‘வானம் வேண்டா உழவின் எம் கானலஞ் சிறுகுடி'2என்பதும் நினைவு கூர்க.

(8)

169. கல்லாது போகிய நாளும், பெரியவர்கண்
செல்லாது வைகிய வைகலும், - ஒல்வ
கொடாஅ தொழிந்த பகலும், உரைப்பின்
படாஅவாம் பண்புடையார் கண்.


1. தொல். உரி. 42.
2. நற். 254.