பக்கம் எண் :

17
 
உண்டு அன்ன - அதிலுள்ள தளிரைத் தனக்கு உணவாக உண்டு மகிழ்ந்தாற் போன்ற. மன்னா மகிழ்ச்சி - இளமையால் வரும் நிலையா மகிழ்ச்சி, அறிவுடையாளர்கண் இல் -அறிவுடையாரிடத்தில் இல்லை.

(க-து.)அறிவுடையவர்கள், இளமை யெழுச்சிகளை அறவினைகட்கு ஊறு செய்வனவாகக் கருதி அஞ்சுவரே யல்லால் அவற்றை நுகர்ந்து களியார்.

(வி-ம்.)வெறி - தெய்வமேறி யாடுந் தன்மை ; அயர்தல் - அதனைச் செய்தல் ; பலியிடுதலின், கொடிய களமாயிற்று. வேலைத் தன்கையில் அடையாளமாகப் பிடித்துக் கொண்டு ஆடும் மகனாதலில். வெறியாட்டாளன் ‘வேல மகன்' எனப்பட்டான் ; வேலன் என்று கூறுதலும் உண்டு; இது குறிஞ்சி நிலத்து வழக்கம் ; அங்கே முருகன் தெய்வமாகலின் இங்ஙனமாயிற்று. பூக்களுடன் இடையிடையே இலைகளும் இட்டு மாலை தொடுப்பராகலின், ‘முறி ஆர் நறுங்கண்ணி ' எனப்பட்டது. குளகு - தழையுணவு. பலிக்கடா, தான் கொலையுறுதற்கு அடையாளமாயுள்ள வேலன் கை மாலைக்கு அஞ்சாமல். அறியாமையால் அதிலுள்ள தழையைத் தனக்கு உணவாகக் கருதி உண்டு' சின்னேர இன்பம் நுகர்ந்தது ; அறிந்தோர்க்கு அச்செயல் ஏழைமையுடையதாய்த் தோன்றும். இளமையெழுச்சிகளின் மயங்கி, ‘மற்றறிவாம் நல்வினை யாம் இளையம்' 1 என்று மக்கள் ஒழுகுதலும் அத்தகையதேயாம் பின்வரும் பேரிடையூறு கருதாமற் சிறிதின்ப நுகர்வுக்காக அறவினைகள் கைவிட்டு நிற்றல் தவறென்பது உணர்த்தப்பட்டது.

(6)

17. பனிபடு சோலைப் பயன்மர மெல்லாம்
கனியுதிர்ந்து வீழ்ந்தற் றிளமை - நனிபெரிதும்
வேல்கண்ணள் என்றிவளை வெஃகன்மின் மற்றிவளும்
கோல்கண்ண ளாகும் குனிந்து.

(பொ-ள்.)இளமை - இளமைப் பருவம், பனி படு சோலை பயன் மரம் எல்லாம் - குளிர்ச்சி பொருந்திய சோலையிலுள்ள பயன் தரும் மரங்களெல்லாவற்றினின்றும், கனி உதிர்ந்து வீழ்ந்து அற்று - பழங்க ளுதிர்ந்து