பக்கம் எண் :

19
 

(க-து.)இளமை கழிதலை யாரும் தமக்குள் உணர்தலின், அறிவுடையோர் அந் நிலையா இளமையை ஒரு பொருளாக மதித்து மகிழார்.

(வி-ம்.)வயது என்பது இத்தனை ஆண்டுகள் என்னுங் கருத்தில் வந்தமையின், ‘உள' என்று பன்மை வினைகொண்டது . ‘பல்லின் பால்' என்பதிற் ‘பால்' தன்மை யென்னும் பொருட்டு ; ‘பான்மை' என்பதிற் போல. சிகையும் - சிகையேனும், ஆண்டு முதிர்ந்து பல்பழுதாகிக் குடலுங் கெடுதலின் இங்ஙனம் ஒருவரைப்பற்றி ஒருவர் நலம் உசாவும்உள் எண்ணம் கொள்ளப்படுகின்றது. யாக்கைக் கோள் - யாக்கையின் தன்மை ; இளமை, இவ்வாற்றால் , இளமை நிலையாமை உணர்த்தப்பட்டது.

(8)

19. மற்றறிவாம் நல்வினை யாம்இளையம் என்னாது
கைத்துண்டாம் போழ்தே கரவா தறஞ்செய்ம்மின்;
முற்றி யிருந்த கனியொழியத் தீவளியால்
நற்காய் உதிர்தலும் உண்டு.

(பொ-ள்.)மற்று அறிவாம் நல்வினை - நற்செயல்களைப் பின்னால் தெரிந்து செய்து கொள்ளலாம், யாம் இளையம் - இப்போது யாம் இளமைப் பருவமுடையேம், என்னாது - என்று கருதாமல், கைத்து உண்டாம் போழ்தே - கையில் பொருள் உண்டானபொழுதே. கரவாது அறம் செய்ம்மின் - ஒளியாமல் அறஞ் செய்யுங்கள் ; ஏனென்றால், முற்றியிருந்த கனி ஒழிய - பழுத்திருந்த பழங்களேயல்லாமல், தீ வளியால் - கோடைக் காற்றினால், நல் காய் உதிர்தலும் உண்டு - வலிய காய்களும் மரங்களிலிருந்து விடுதலுண்டு.

(க-து.)மூத்தோரே யல்லாமல் இளையோரும் திடுமென இறந்துபோதல் உண்டாகலின், கையிற் பொருள் உண்டான இளமைக் காலத்திலேயே அதனை அறஞ்செய்து பயன் கொள்ளவேண்டும்.

(வி-ம்.)‘யாம் இளையம்' என்ற குறிப்பு ‘இப்போது யாம் இளமையுடையேம் ; அவ்விளமை யின்