(பொ-ள்.)யானை எருத்தம் பொலிய - யானையின் கழுத்து விளங்கும்படி, குடை நிழல் கீழ் - குடை நிழலில சேனைத் தலைவராய் - பல சேனைகட்குத் தலைவராக, சென்றோரும் - ஆரவாரமாய் உலாச்சென்ற அரசர்களும், ஏனைவினை உலப்ப - மற்றத் தீவினை கெடுக்க அதனால், தாம் கொண்ட மனையாளை மாற்றார் கொள - தாம் திருமணஞ் செய்துகொண்ட மனைவியையும் பகைவர்கள் கவர்ந்து கொள்ளும்படி, வேறு ஆகி வீழ்வர் - முன் நிலைக்கு வேறான வறுமையாளராகி நிலைகுலைவர். (க-து.)அரசரும் வறியராவர். (வி-ம்.)இவர் ஏறியதனால் யானையின் கழுத்துக்கு அழகு உண்டாயிற்று என்று குறிப்பதனால் இவரது பெருமை சிறப்பிக்கப்பட்டது. ‘நிழற் கீழ்' என்பதிற் ‘கீழ்' ஏழாவதன் உருபு. ஏனை வினை - மற்றை வினை ; அது தீவினை என்னுங் குறிப்பில் வந்தது. ‘உலப்ப' என்னும் வினையெச்சம் காரணப் பொருளுள்ளது. மனையாளையும் என்று உம்மை விரித்துக் கொள்வது சிறப்பு. யானை யெருத்தத்திற் சென்றோரும் இங்ஙனம் நிலைகுலைவர் என்றமையால் ஏனையோர் நிலைகுலைதல் சொல்லாமலே பெறப்படும். தம் மனையாளைப் பிறர் கவர்ந்து கொள்ளு தலைவிட இழிவானதொன்று வேறின்மையின், அடியோடு ஆற்றலைக் கெடுத்துவிட்ட வறுமையின் பெருங் கொடுமைக்கு அதனை எடுத்துக்காட்டினர். (3) 4. நின்றன நின்றன நில்லா எனவுணர்ந் தொன்றின ஒன்றின வல்லே செயின்செய்க; சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன் வந்தது வந்தது கூற்று. (பொ-ள்.)வாழ்நாள் - உடம்போடு கூடிவாழுமாறு ஏற்பட்ட நாட்கள், சென்றன சென்றன - செல்கின்றன செல்கின்றன; கூற்று - நமன், செறுத்து உடன் வந்தது வந்தது - சினந்து விரைந்து வருகின்றான் வருகின்றான் ; ஆதலால் ; நின்றன நின்றன - நிலைபெற்றன நிலைபெற்றனவென்று நினைத்துக்கொள்ளப்பட்ட செல்வப்
|