பிறரை எள்ளற்க வென்பார், ‘என்றும்' என்றார். என் பெறினும் உம்மை உயர்வு சிறப்பு. மேல: பலவின்பால் முற்று.ஆ: ஈறு தொகுத்தல். சுடினும் - உம்மை எதிர்மறை. சிற்றில் என்புழி, சிறுமை வறுமைமேல் நின்றது. (3) 4. பறைபட வாழா அசுணமா உள்ளங் குறைபட வாழார் உரவோர்1 - நிறைவனத்து நெற்பட்ட கண்ணே வெதிர்சாந் தனக்கொவ்வாச் சொற்பட வாழாதாஞ்2 சால்பு. (இ-ள்.)அசுணமா - கேகயப் பறவைகள், பறை பட வாழா - பறையின் ஓசை தஞ் செவியிற்பட்டால் உயிர்வாழ மாட்டா; உரவோர் - அறிவுடையோர், உள்ளம் குறைபட வாழார் - தமது பெருநிலை குறைபட்டால் உயிர்தாங்கமாட்டார், நிறை வனத்து - மரங்கள் நிறைந்த காட்டில், வெதிர் - மூங்கில்கள், நெல் பட்ட கண்ணே - நெல்லுண்டானபோதே, சாம் - பட்டுப் போகும்; சால்பு - நிறையுடைய சான்றோர், தனக்கு ஒவ்வாச் சொல்பட வாழாது - தமது நிறைவுக்குக் குறைவான இழிவுரைகள் உண்டானால் உயிர் வாழ மாட்டார். (க-து.) சான்றோர்கள் தமக்குமானக்கேடு உண்டாகும்படி உயிர்வாழமாட்டார். (வி-ரை.) பறை - ஒருமுகக் கருவி.அசுணமா பறையோசை கேட்கின் இறந்துபடு மென்பதனை, ‘மறையிற்றன் யாழ் கேட்ட மானை யருளா, தறைகொன்று மற்றத னாருயிரெஞ்சப் பறையறைந்தாங்கு' (26) என்னும் நெய்தற் கலியா னுணர்க.‘உள்ள' மென்றது ஈண்டு ஊக்கத்தை.‘உள்ளத்தனைய துயர்வு' (திருக்குறள், ஊக்கமுடைமை, 5) என்பதுங் காண்க.தமது ஊக்கங் குறையும்படி ஏதேனும் அலர்மொழி ஏற்படுமானால் உரவோர் உயிர் தாங்காரென்பது கருத்து. நெற்பட்ட கண் - கண் : வினையெச்ச விகுதி; ஈண்டு விகாரத்து இயல்பு. சாம் : ஈற்று மிசையுகரம் மெய்யொடுங் கெட்டது. பெரியோர் செயல் அவரியல்பின் மேலேற்றிச் ‘சால்பு வாழாதா' மெனப்பட்டது: ஆம் : அசை.இச்செய்யுளிற் கூறப்பட்ட கருத்துக்கள் நான்கும்ஒன்றே
1 பெரியோர் 2 சொல்பட்டால் சாவதாம்.
|