பக்கம் எண் :

7
நான்மணிக்கடிகை
மூலமும் உரையும்
கடவுள் வாழ்த்து

 1. மதிமன்னு மாயவன்வாள்முகம் ஒக்கும்
கதிர்சேர்ந்த ஞாயிறு சக்கரம் ஒக்கும்
முதுநீர்ப் பழனத்துத் தாமரைத் தாளின்
எதிர்மலர் மற்றவன் கண்ஒக்கும் பூவைப்
புதுமலர் ஒக்கும் நிறம்.

(இதன் பொருள்) மதி -திங்கள், மன்னும் மாயவன் - அழிதலில்லாததிருமாலினது, வாள் முகம் ஒக்கும் - ஒளியையுடையதிருமுகத்தை ஒத்திருக்கும்; கதிர்சேர்ந்த ஞாயிறு -ஒளிசிறந்த ஞாயிறு, சக்கரம் ஒக்கும் அவனது சக்கரப்படையை ஒத்திருக்கும், முதுநீர்ப் பழனத்து - வற்றாதநீரையுடைய கழனிகளில் முளைத்த, தாமரைத்தாளின் -செந்தாமரைத் தண்டினின்றும், எதிர் மலர் - தோன்றுஞ்செந்தாமரைப் பூ, அவன் கண் ஒக்கும் - அவன்றன் கண்களைஒத்திருக்கும்; பூவைப் புதுமலர் - காயா மரத்தின்புதுப் பூ; நிறம் ஒக்கும் - அவனது திருமேனியின் நிறத்தைஒத்திருக்கும்.

(விளக்கவுரை) மன்னுதல்-நிலைபெறுதல்.மாயவன் - வியக்கத்தக்க ஆற்றலுடையவன்; திருமால்.ஒக்கும் : செய்யுமென்னுமுற்று. என்றும் உள்ள நீரென்பார்,‘முதுநீ' ரென்றார். முதுமை - பழைமை; தொன்றுதொட்டுஎன்றும் வற்றாது வந்த நீரென்பது பொருள். எதிர்தல்- தோன்றல்; ‘எதிர்பூஞ் செவ்வி' (வேனிற்காதை. 48)என்னுஞ் சிலப்பதிகாரத்திலும் இப்பொருளுண்மைகாண்க. எதிர்மலர் - செவ்வி மலர் எனினுமாம்.