பக்கம் எண் :

8

‘மதிமுக மொக்கு' மென்று கூறிய உவமையை ‘முகம் மதியொக்கு' மென்னுங் கருத்திற் கொள்க; பிறவும் அன்ன. இதனை ‘மாறிய வுவமை' யென ஓரணியாகக் கொள்ளுப.‘நான்மணிக்கடிகை' யென்னும் நூல் ஒவ்வொரு பாட்டிலும் நந்நான்கு பொருள் வைத்துக் கூறுதலின், அக்குறிப்பினை இக் கடவுள் வாழ்த்துச் செய்யுளும் நான்கு பொருளே கூறிக் குறிப்பதாயிற்று.இக் குறிப்பினை மேற்பாட்டினுங் காண்க. இது பஃறொடை வெண்பா.மற்று : அசை.

(1)

 2. படியை மடியகத் திட்டான் அடியினால்
முக்காற் கடந்தான் முழுநிலம் - அக்காலத்து 
ஆப்பனி 1 தாங்கிய குன்றெடுத்தான் சோவின்
அருமை யழித்த மகன்.

(இ-ள்.)படியை - உலகத்தை, மடியகத்து இட்டான் - வயிற்றில் வைத்தான், அடியினால் - தன் திருவடிகளால், முழு நிலம் - உலகங்கள் முழுமையும், முக்கால் கடந்தான் - மூன்று முறைகளில் தாவியளந்தான்; அக்காலத்து - இந்திரன் மழை பெய்வித்தபோது, ஆ பனி - ஆனிரைகளின் நடுக்கத்தை, தாங்கிய - தடுக்கும் பொருட்டு, குன்று எடுத்தான் - ‘கோவர்த்தன' மென்னும் மலையைக் குடையாகத் தூக்கினான்; சோவின் அருமை - பாணாசுரனது அழித்தற்கு அரிய நெருப்பு மதிலை அழித்த மகன் - அழித்த பெருமானான திருமால்.

(வி-ரை.)யசோதைக்குக் கண்ணன் எல்லா உலகங்களையுந் தன் வயிற்றகத்திற் காட்டினனாதலின், ‘படியை மடியகத் திட்டா' னென்றார்.மடியகத்து : உருபின்மேற் சாரியை நின்றது.மடி - வயிறு; ‘மடியகத்திட்டாள் மகவை' (கனாத். 22)என்னுஞ் சிலப்பதிகார வடிக்கு அடியார்க்கு நல்லா ருரைக்கும் உரையைக் காண்க. ‘மூக்கா லென்றது, ஒருகால் நிலவுலகத்தையும் மற்றொருகால்விண்ணுலகத்தையும் கடந்து பின்னொருகால் மாபலியின் தலைமேல் வைத்துக் கீழுலகத்தையும் அளந்தன னென்றற்கு : தாங்கிய : செய்யிய வென்னும் வாய்பாட்டு வினையெச்சம்; தாங்குதல் - துயர்கெடுத்தல்.ஆயர்பாடியினர் தேவேந்திரனுக்குத் தைப் பொங்கலில் இட்ட பொங்கலுணவைத் தான்ஏற்றுக்


(பாடம்) 1 ஆனிரை, ஆநிரை,