பக்கம் எண் :

9

கொண்டமையால், இந்திரன் சினந்து கல் மழை பெய்வித்த போது பசுக்கள் நடுங்குதல் கண்டு ‘கண்ணன், கோவர்த்தன மலையைக் குடையாகத் தூக்கிப் பிடித்து அவற்றைப் பாதுகாத்தமையால், ‘ஈண்டுக் குன்றெடுத்தா' னென்றார்.‘உஷா'வி னிடத்திருந்த ‘அநிருத்தனை' மீட்டற்குச் சென்றபோது ஆங்கெதிர்த்துப் பொருத பாணாசுரனை அவன் மதிற் கோட்டையோடு அழித்தமையே ‘சோ' அழித்த வரலாறு.அம்மதில் நெருப்பினானியன்ற தாகலின், ‘சோவின் அருமை' என்றார்.மகன் -இங்கே பெரியோன் என்னும் பொருட்டு.

(2)

நூல்

 3. எள்ளற்க என்றும் எளியாரென்1 றென்பெறினும்
கொள்ளற்க கொள்ளார்கைம் மேலவா2 - உள்சுடினும்
சீறற்க சிற்றிற் பிறந்தாரைக் கூறற்க
கூறல் லவற்றை விரைந்து.

(இ-ள்.)என்றும் - எக்காலத்தும், எளியார் என்று - பொருள்வலிகளாற் குறைந்தவரென்று, எள்ளற்க - பிறரை இகழாதொழிக; என்பெறினும் - மிகச் சிறந்த தொன்றைப் பெறுவதனாலும், கொள்ளார் கை - கொள்ளத் தகாதவருடைய கைகள், மேல ஆ - தன் கைகளுக்கு மேற்பட்டன ஆகும்படி, கொள்ளற்க - அவர்பால் ஒன்றும் ஏற்றுக் கொள்ளாதொழிக: சிறு இல் பிறந்தாரை - வறுமைமிக்க குடியிற் பிறந்தவர்களை, உள் சுடினும் - அவர் செய்கை தனதுள்ளத்தை வருத்துவதாயினும், சீறற்க - சினவா தொழிக; கூறு அல்லவற்றை - சொல்லத்தகாத சொற்களை, விரைந்து - பதைத்து, கூறற்க -சொல்லாதொழிக.

(க-து.) எவரையும் எளியரென்று இகழாதே; சிறந்த பொருளாயினுந் தகாதவர் கொடுக்க வாங்காதே; தகாதன செய்தாலும் ஏழை மக்களைச் சீறாதே;தகாத சொற்களைப் பதைத்துச் சொல்லிவிடாதே.

(வி-ரை.)தன்னிடத்தில் ஒன்றை நச்சி நட்பாய் வருங்காலத்திலும்,அல்லது தனக்கு ஆக்கம் வந்த காலத்திலும்


(பாடம்) 1 எளியரென்.
2 கை மேற்பட.