பக்கம் எண் :

21

(ஆதலால்), ஊடுநிலை பிணங்குந்தன்மை, எவன் கொல் - எற்றுக்கு, எ-று.

கண்டிரள் முத்தம் என்றது மேனி திரண்ட முத்தம் என்றபடி அகத்திலும்.பிறாண்டுங் ‘கண்டிரண் முத்தம்' என வருதலுங் காண்க. கொல் , ஓ : அசைநிலை தலைவர் வருவர்; இனிப் பிணங்குதல் வேண்டா என்பது குறிப்பு.

(23)

வினைமுற்றிய தலைமகள் நெஞ்சொடு சொல்லியது

24. எல்லா வினையுங் கிடப்ப வெழுநெஞ்சே
கல்லோங்கு கானங் களிற்றின் மதநாறும்
பல்லிருங் கூந்தல் பணிநோனாள் கார்வானம்
1மெல்லவுந் தோன்றும் 2பெயல்.

(ப-ரை.) கல் ஓங்கு கானம் - மலைகள் உயர்ந்த காடுகள், களிற்றின் மதம் நாறும் - யானையின் மதம் நாறாநிற்கும் ; கார் வானம் - கரிய வானத்தின்கண். பெயல் - மழை. மெல்லவும் தோன்றும் - மென்மையாகத் தோன்றாநிற்கும்; (ஆதலால்) பல் இருங்கூந்தல் - பலவாகிய கரிய கூந்தலையுடையவள், பணிநோனாள் - ஆற்றியிருத்தற்கு நான் கூறிய சொல்லை இனிப் பொறுக்கமாட்டாள்; நெஞ்சே - மனமே, எல்லா வினையும் கிடப்ப - எல்லாத் தொழில்களும் ஒழிந்து நிற்க; எழு - நீ போதற்கு ஒருப்படு, எ-று.

கிடப்ப : வியங்கோள்; வினையெச்சமாகக் கொண்டு கிடக்கும் வகை எனப் பொருளுரைத்தலுமாம். களிற்றின் மதம் நாறும் என்றது கார்காலத்தில் பிடியுடன் இயைந்தாடுதலான் என்க. பணி - பணித்த சொல். எல்லியும் என்று பாடமாயின் இரவிலும் எனப் பொருள் கொள்க.

(24)

பருவங்கண் டழிந்த தலைமகள் ஆற்றல்வேண்டித் தோழி
தனது ஆற்றாமை தோன்ற வுரைத்தது

25. கருங்கால் வரகின் பொரிப்போ லரும்பவிழ்ந்
தீர்ந்தண் புறவிற் றெறுழ்வீ மலர்ந்தன
சேர்ந்தன செய்குறி வாரா ரவரென்று
கூர்ந்த பசலை யவட்கு.


1. எல்லியும் என்றும் பாடம்.

2. செயல் என்றும் பாடம்.