(ப-ரை.) செம் கண் - சிவந்த கண்களையும், வரி - வரிகளையுமுடைய, வரால்மீன் பிறழும் - வரால்மீன்கள் பிறழா நிற்கும், காவிரிநாடான் - காவிரிநாட்டையுடைய செங்கட் சோழன், பொருநரை - (தன்னோடு) போர் செய்வாரை, அட்டகளத்து - கொன்ற போர்க்களத்தில், அஞ்சனம் குன்று - நீலமலையை, ஏய்க்கும் - ஒத்துத் தோன்றும், யானை - யானைகள், அமர் உழக்கி - போரின்கட் கலக்கி, இங்குலிகக்குன்று போல் சாதிலிங்க மலையைப் போல, தோன்றும் - சிவந்து தோன்றாநிற்கும் எ-று. ஏய்க்கும் - உவமச்செல். மீன் - இத் தமிழ்ச் சொல்லை வடநூலார் மீனம் எனத் திரித்து வழங்குவர். (7) 8. யானைமேல் யானை நெரிதர வானாது கண்ணேர் கடுங்காணை மெய்ம்மாய்ப்ப1- எவ்வாயும் எண்ணருங் குன்றிற் குரீஇயினம் போன்றவே பண்ணா ரிடிமுரசிற் பாய்புன னீர்நாடன் நண்ணாரை யட்ட களத்து. (ப-ரை.) பண்ஆர்-ஒப்பனையமைந்த, இடிமுரசு இன்-இடிக்கு முரசினையுடைய, பாய் புனல் - பாய்ந்துசெல்லும் நீரினையுடைய, நீர்நாடான் - காவிரிநாட்டை யுடையோன், நண்ணாரை பகைவரை, அட்டகளத்து -கொன்ற போர்க்களத்தில், யானைமேல் யானை நெரிதர - யானைகள் மேல் யானைகள் சாய, ஆனாது - நீங்காமல், கண்நேர் (மகளிரின்) கண்களை யொக்கும், கடுங்கணை - கடிய அம்புகள், எ வாய் உம் எவ்விடத்தும் (பாய்ந்து), மெய் மாய்ப்ப (அவற்றின்) உடலை மறைத்தலால் (அவை) , எண் அரு -அளவில்லாத, குன்றில் - மலைகளில், குரீ இ இனம் - குருவியின் கூட்டங்கள் மொய்த்திருப்பவற்றை, போன்ற - ஒத்தன எ-று. மாய்ப்ப - மறைக்க; இஃது இப் பொருட்டாதலை 'களிறு மாய்க்குங் கதிர்க் கழனி' என்னும் மதுரைக் காஞ்சியடி உரையானறிக. குரீஇ: இயற்கை யளபெடை, முரசின் யொக்கும் பாய்புனல் என உவமையாக்கலும் ஒன்று. (8) 9. மேலோரைக் கீழோர் குறுதிக் குறைத்திட்ட காலார்சோ டற்ற கழற்கா லிருங்கடல் ஊணில் சுறபிறழ்வ2 போன்ற புனனாடன் நேராரை யட்ட களத்து. 1 . 'மெய்ம்மறைப்ப' என்றும் பாடம். 2 . 'இருங்கடலுணீலச்சுறாப்பிறழ்வ' என்றும் பாடம்.
|