பொய்கையார் இயற்றிய களவழி நாற்பது 1. நாண்ஞாயி றுற்ற செருவிற்கு வீழ்ந்தவர் வாண்மாய் குருதி களிறுழக்கத்-தாண்மாய்ந்து 1முன்பக லெல்லாங் குழம்பாகிப் 2 பின்பகல் துப்புத் துகளிற் கெழூஉம் புனனாடன் தப்பியா ரட்ட களத்து. (பதவுரை) புனல் நாடான் - நீர்நாட்டையுடைய செங்கட் சோழன், தப்பியார் - பிழை செய்தவரை, அட்ட - கொன்ற, களத்து போர்க்களத்தில், நாள் ஞாயிறு - ஞாயிறு தோன்றிய காலைப் பொழுதில், உற்ற - வந்தடைந்த, செருவிற்கு - போரில், வீழ்ந்தவர் - பட்டவருடைய, வாள்மாய் வாளழுந்துதாலலொழுகும், குருதி - உதிரத்தை, களிறு உழக்க யானைகள் கலக்க, தாள் - (அவற்றின்) காலாலே, மாய்ந்து சுருங்கி, முன்பகல் எல்லாம் முற்பகற் பொழுதெல்லாம், குழம்பு ஆகி சேறாகி, பின்பகல் பிற்பகற்பொழுதில், துப்பு துகளில் பவளத் துகள் போல, கெழூஉம் - (விசும்பெங்கும்) பரந்து செறியாநிற்கும் எ-று. நாள் என்பது பகலின் முற்கூறாகிய காலைப்பொழுதைக் குறிக்கும். இதனை, நாணிழல், நாளாங்காடி என்பவற்றால் அறிக; குருதிமாய்ந்து குழம்பாகிக் கெழூஉம் என முடிக்க. செருவிற்கு; வேற்றுமை மயக்கம். வாண்மாய்-மறைதல் என்னும் பொருட்டாய் மாய்தல் என்பதன் முதனிலை அழுந்தும் என்னும் பொருளில் வந்தது. கெழூஉம் : செய்யுளிசை கெட்டவழி வந்த அளபெடை, தப்பியார்: வினையாலணையும் பெயர், தப்பு: பகுதி, இன் இடை நிலை ஈறுகெட்டது. (1)
1. 'முற்கபல்' என்றும் பாடம். 2. 'பிற்பகல்' என்றும் பாடம்.
|