பக்கம் எண் :

16

முன் : மிகுதி யென்னும் பொருளது. பண் கலனை ; இது கல்லணையெனவும் வழங்கும்.

10. பொருளுணர்வா ரில்வழிப் பாட்டுரைத்த லின்னா
இருள்கூர் சிறுநெறி தாந்தனிப்போக் கின்னா
அருளில்லார் தங்கட் செலவின்னா வின்னா
பொருளில்லார் வண்மை புரிவு.

(ப-ரை.) பொருள் உணர்வார் - (பாட்டின்) பொருளை அறியும் அறிவுடையார், இல்வழி - இல்லாத இடத்தில், பாட்டு உரைத்தல் செய்யுளியற்றிக் கூ.றுதல், இன்னா - துன்பமாம்; இருள் கூர் - இருள் மிகுந்த, சிறுநெறி - சிறிய வழியிலே, தனி போக்கு - தனியாகப் போகுதல், இன்னா - துன்பமாம் ; அருள் இல்லார் தம்கண் தண்ணளியில்லாதவரிடத்தில். செலவு - (இரப்போர்) செல்லுதல் ; இன்னா துன்பமாம் ; பொருள் இல்லார் பொருளில்லாதவர், வண்மை புரிவு ஈதலை - விரும்புதல், இன்னா - துன்பமாம் எ-று.

புலவராயினார் பாட்டின் பொருளுணரும் அறிவில்லார்பால் தாம் அரிதிற் பாடிய பாட்டுக்களைக்கூறின், அவர் அவற்றின் பொருளை அறியாராகலின், தம்மை நன்கு மதித்தல் செய்யார் அதுவேயன்றி இகழ்தலுஞ் செய்வர் ; அவற்றின் மிக்க துன்பம் பிறிதில்லை யாகலின் ‘பொருளுணர்வா ரில்வழிப் பாட்டுரை தலின்னா' எனப்பட்டது.

"புலமிக் கவரைப் புலமை தெரிதல்
புலமிக் கவர்க்கே புலனாம்"
‘கல்லா தவரிடைக் கட்டுரையின் மிக்கதோர்
பொல்லாத தில்லை யொருவற்கு'

என்னும் பழமொழிச் செய்யுட்கள் இங்கே கருதற்பாலன. தாம்அசை. தம் : சாரியை.

11. உடம்பா டில்லாத மனைவிதோ ளின்னா1
இடனில் சிறியாரோ டியர்த்தநண் பின்னா
இடங்கழி யாளர் தொடர்பின்னா வின்னா
கடனுடையார் காணப் புகல்.

(ப-ரை.) உடம்பாடு இலாத - உளம் பொருந்துலில்லாத மனைவி தோள் - மனைவியின் தோளைச்சேர்தல், இன்னா - துன்ப


(பாடம்) 1. மனைவி தொழி லின்னா.