பக்கம் எண் :

24

புரிதலுங் கொள்க. அறைபறை யன்னவர் - தாம் கேட்ட மறைக்கப்படும் பொருளினை யாண்டும் வெளிப்படுத்து மியல்பினர்; ‘அறைபறை யன்னர் கயவர்தாங் கேட்ட, மறைபிறர்க் குய்த்துரைக் கலான்' என்றார் பொய்யில் புலவரும்.

24. ஏமமில் மூதூ ரிருத்தன் மிகவின்னா
தீமை யுடையா ரயலிருத்த னன்கின்னா
காமமுதிரி னுயிர்க்கின்னா1வாங்கின்னா
யாமென் பவரொடு நட்பு.

(ப-ரை.) ஏமம் இல் - காவல் இல்லாத, மூதூர் - பழைய ஊரிலே, இருத்தல் - வாழ்தல், மிக இன்னா - மிகவுந் துன்பமாம்; தீமை உடையார் - தீச்செய்கையுடையவரது, அயல் இருத்தல் பக்கத்திலேயிருத்தல், நன்கு இன்னா - மிகவும் துன்பமாம்; காமம் முதிரின் - காமநோய் முற்றினால், உயிர்க்கு இன்னா உயிர்க்குத் துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, யாம் என்பவரொடு யாமென்று தருக்கியிருப்பவரோடு செய்யும், நட்பு - நட்பானது, இன்னா - துன்பமாம் எ-று.

ஏமம் - மதிற்காவலும், அரசின் காவலும் ஆம். அயலிருத்தல் என்றமையால் அவரைச் சேர்ந்தொழுகுதல் கூறவேண்டாதாயிற்று. காமம் உயிரைப்பற்றி வருத்து மென்பதனைக் ‘காமமு நாணு முயிர் காவாத் தூங்குமென், னோனா வுடம்பி னகத்து' என்னும் முப்பாலானு மறிக.

25. நட்டா ரிடுக்கண்கள் காண்டல் நனியின்னா2
ஒட்டார் பெருமிதங் காண்டல் பெரிதின்னா3
கட்டில்லா மூதூ ருறையின்னா வாங்கின்னா
நட்ட கவற்றினாற் சூது.

(ப-ரை.) நட்டார் - நட்புக் கொண்டவருடைய, இடுக்கண்கள் துன்பங்களை, காண்டல் - பார்த்தல், நனி இன்னா - மிகவுந் துன்பமாம்; ஒட்டார் - பகைவரது, பெருமிதம் - செருக்கை, காண்டல் - பார்த்தல், பெரிது இன்னா - மிகவுந் துன்பமாம்; கட்டு இல்லா - சுற்றமாகிய கட்டு இல்லாத, மூதூர் - பழையவூரிலே, உறை வாழ்தல், இன்னா - துன்பமாம்; ஆங்கு அவ்வாறே, நட்ட - நட்பாகக் கொள்ளப்பட்ட,


(பாடம்) 1. உயிர்க்கின்னாது.

2. இடுக்க ணனிகண்டா னன்கின்னா.

3. கண்டாற் பெரிதின்னா