பக்கம் எண் :

32

(ப-ரை.) பிறன் மனையான் பின் நோக்கும் - பிறன் மனைவியைக் காமுற்றுப் பின் றொடரக் கருதும். பேதைமை - அறிவின்மை, இன்னா - துன்பமாம்; மறம் இலா மன்னர் - வீரமில்லாத அரசர், செரு புகுதல் - போர்க்களத்திற் செல்லுதல், இன்னா துன்பமாம்; வெம் புரவி - விரைந்த செலவினையுடைய குதிரையினது, வெறும் புறம் - கல்லணையில்லாத முதுகில், ஏற்று - ஏறுதல், இன்னா - துன்பமாம்; திறன் இலான் - செய்யுங் கூறுபாடறியாதவன், செய்யும் வினை - செய்யுங் காரியம், இன்னா துன்பமாம் எ-று.

புரவியின் புறமென்று மாற்றுக. திறன் - அறிந்தாற்றிச் செய்யும் வகை.

39. கொடுக்கும் பொருளில்லான் வள்ளன்மை யின்னா
கடித்தமைந்த பாக்கினுட் கற்படுத லின்னா
கொடுத்து விடாமை கவிக்கின்னா வின்னா
மடுத்துழிப் பாடா விடல்.

(ப-ரை.) கொடுக்கும் - கொடுத்தற்குரிய, பொருள் இல்லான் - பொருளில்லாதவனுடைய, வள்ளன்மை - ஈகைத் தன்மை, இன்னா - துன்பமாம்; கடித்து அமைந்த - கடித்தற்கு அமைந்த, பாக்கினுள் - பாக்கில், கல் படுதல் - கல் இருத்தல், இன்னா - துன்பமாம்; கவிக்கு - புலவனுக்கு, கொடுத்து விடாமை - பரிசில் கொடுத்துனுப்பாமை, இன்னா - துன்பமாம்; மடுத்துழி - தடைப்பட்ட விடத்து, பாடா விடல் - பாடாது விடுதல், இன்னா - (பாடும் புலவனுக்குத்) துன்பமாம் எ-று.

கடித்து; கடிக்க என்பதன் றிரிபு; பிளந்து எனினுமாம். கல் என்றது பாக்கிற் படுவதொரு குற்றம். மடுத்துழி - பொருள் பெற்ற விடத்தில் எனினுமாம். பாடா : ஈறு கெட்ட எதிர்மறை வினையெச்சம்.

40. அடக்க முடையவன் மீளிமை யின்னா
துடக்க மிலாதவன் றற்செருக் கின்னா
அடைக்கலம் வவ்வுத லின்னாவாங் கின்னா
அடக்க வடங்காதார் சொல்.

(ப-ரை.) அடக்கம் உடையவன் - (ஐம்பொறிகளை) அடக்குதலுடையவனது, மீளிமை - தறுகண்மை, இன்னா - துன்பமாம். துடக்கம் இலாதவன் - முயற்சியில்லாதவன், தற்செருக்கு - தன்னையே